பிரதமரை பார்த்த அடுத்த நாளே சங்கியாக மாறிய ரஷீத் அகமது!

பிரதமரை பார்த்த அடுத்த நாளே சங்கியாக மாறிய ரஷீத் அகமது!

Share it if you like it

பத்ம விருது பெற்ற ரஷீத் அகமது இனிமேல் எனது மொத்த குடும்பமும் மோடியின் ஆதரவாளராக இருக்கும் என அவர் பேசிய காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடகாவைச் சேர்ந்தவர் ரஷித் அகமது காத்ரி. இவர், புகழ்பெற்ற பிட்ரி கைவினை கலைஞர் ஆவார். இவருக்கு, மத்திய அரசு அண்மையில் பத்மஸ்ரீ விருதினை அறிவித்தது. அதன்படி, ரிஷித் பத்ம விருதினை பெற்றார். அந்த வகையில், விழா நிறைவு பெற்றதும், விருதாளர்களுடன் பிரதமர் மோடி சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விருது பெற்றவர்களை சந்தித்தனர்.

அப்போது, பாரதப் பிரதமர் மோடியிடம் ரஷீத் அகமது கூறியதாவது : காங்கிரஸ் ஆட்சியில் இந்த விருது கிடைக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால், கிடைக்கவில்லை. பா.ஜ.க. ஆட்சியில் கிடைக்காது என்று கருதினேன். ஆனால், எனக்கு விருது கிடைத்து விட்டது. இந்த விருது வழங்கிய தங்களுக்கு எனது நன்றி என அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், பிரபல ஹிந்தி ஊடகமான abp ஊடகம் ரஷூத் அகமதை நேர்காணல் கண்டது. அப்போது, அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார் ;

“நான் இன்றுவரை காங்கிரஸின் வாக்காளராக இருந்தேன். ஆனால், மோடிஜி என்னை பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுத்ததன் மூலம் என் எண்ணத்தை மாற்றினார். இன்று முதல் நானும் எனது குடும்பமும் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்போம். மோடி ஜிக்கு நாங்கள் கைமாறு செய்வோம் என கூறியுள்ளார்.


Share it if you like it