கண்டிஷன் போட்ட பிரதமர்… ஆடிப்போன பொம்மன் – பெள்ளி!

கண்டிஷன் போட்ட பிரதமர்… ஆடிப்போன பொம்மன் – பெள்ளி!

Share it if you like it

நீங்கள் இருவரும் கட்டாயம் டெல்லி வர வேண்டும் என கண்டிஷனோடு பிரதமர் மோடி தங்களுக்கு உத்தரவிட்டதாக பெள்ளி புதிய தலைமுறை ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்

தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு பாரதப் பிரதமர் மோடி நேற்று வருகை புரிந்தார். அப்போது, ஆஸ்கர் விருது பெற்ற ‘எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப் படத்தில் நடித்த பொம்மன் – பெள்ளி ஆகியோரை சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, பிரபல ஊடகமான புதிய தலைமுறை பெள்ளியிடம் பேட்டி கண்டது. அப்போது, அவர் கூறியதாவது ; பிரதமர் எங்களிடம் நகைச்சுவையாக பேசினார். இருவரும் டெல்லி வர வேண்டும் என கூறினார். நான் முடியாது என்று கூறினேன். அவர் கட்டாயம் வர வேண்டும் என கண்டிஷன் போட்டார். உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடி கூறியதாக பெள்ளி தெரிவித்தார்.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it