மக்கள் மருந்தகம்: ஜி20 பிரதிநிதிகள் பாராட்டு… மத்திய அமைச்சர் தகவல்!

மக்கள் மருந்தகம்: ஜி20 பிரதிநிதிகள் பாராட்டு… மத்திய அமைச்சர் தகவல்!

Share it if you like it

மக்கள் மருந்தகத்துக்கு ஜி20 பிரதிநிதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதனை, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி20 அமைப்புக்கு தற்போது இந்தியா தலைமை வகிக்கிறது. அந்த வகையில், ஜி20 சுகாதார செயலாக்க கூட்டம் கோவா மாநிலம் பன்ஜிம் நகரில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு பின் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகளுடன் கோவாவில் செயல்படும் மக்கள் மருந்தகத்தை மத்திய அமைச்சர் பார்வையிட்டார்.

இதையடுத்து, அமைச்சர் மன்சுக் மாண்டவியா பத்திரிகையாளர்களிடம் கூறும் போது இவ்வாறு கூறினார். ‘‘மக்கள் மருந்தகத்தில் விற்கப்படும் தரமான மற்றும் மலிவு விலை மருந்துகள் ஏழை மக்களுக்கு எவ்வாறு பயன் அளிக்கிறது என்பது குறித்து விளக்கினேன். இதை ஆர்வத்துடன் கேட்ட அவர்கள் இத்திட்டத்தை வெகுவாக பாராட்டினர். மேலும் இதுபோன்ற மலிவு விலை மருந்தக திட்டத்தை அவர்கள் தங்கள் நாட்டிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறினர். யுனிசெப் மற்றும் உலக சுகாதார நிறுவன அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகளும் மக்கள் மருந்தகத்தை பார்வையிட்டனர்’’ என்றார்.


Share it if you like it