இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ: நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர்!

இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ: நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர்!

Share it if you like it

இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ படகினை எதிர்வரும் செவ்வாய் கிழமை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பாரதர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.   

ஜெர்மன் நாட்டின் நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ. 747 கோடி ரூபாய் செலவில் கொச்சி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் மூலம் இத்திட்டம் செயல்படுத்த உள்ளது. இத்திட்டம், மாநிலத்தின் கனவுத்திட்டம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது கேரள போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறைக்கு உற்சாகமான காலம் காத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.   

மெட்ரோ ரயில் பெட்டிகளில் உள்ள சகல வசதிகளும் இந்த வாட்டர் மெட்ரோவிலும் உண்டு. ஒவ்வொரு படகிலும் சுமார் 50 பேர் அமரும் வசதியுடன் 100 பேர் இதில் பயணிக்க முடியும் என்பது கூடுதல் தகவல்.


Share it if you like it