ஜம்முவில் ஜம்மென்று நடந்து முடிந்த கும்பாபிஷேகம்!

ஜம்முவில் ஜம்மென்று நடந்து முடிந்த கும்பாபிஷேகம்!

Share it if you like it

ஜம்மு-காஷ்மீரில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி பாலாஜி கோவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி சீனிவாசன் பக்தர்கள் நாடு முழுவதும் வசித்து வருகின்றனர். அந்த வகையில், பக்தர்களின் வசதிக்காக வேண்டி திருப்பதி தேவஸ்தானம் நாடு முழுவதும் இடம் வாங்கி கோவில்களை கட்டி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ரூ. 30 கோடி செலவில் பிரம்மாண்டமான திருப்பதி பாலாஜி கோவிலினை தேவஸ்தானம் கட்டி முடித்துள்ளது. அதன்படி, இன்று அதன் கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த, நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் மற்றும் காஷ்மீர் ஆளுநர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Share it if you like it