அணிவகுப்பு ஊர்வலம்: இந்திரா காந்தி கொல்லப்பட்ட காட்சி… இந்தியா கடும் கண்டனம்!

அணிவகுப்பு ஊர்வலம்: இந்திரா காந்தி கொல்லப்பட்ட காட்சி… இந்தியா கடும் கண்டனம்!

Share it if you like it

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுகொன்ற காட்சியை அணிவகுப்பு ஊர்வலத்தில் காலிஸ்தானிகள் பயன்படுத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் பாரதப் பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி. இவர், கடந்த 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் நாள் காலை 09:20 மணியளவில், அவரது இரு பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சீக்கியர்களின் முக்கிய கோயிலான பொற்கோயிலை ஆப்ரேஷன் புளூஸ்டார் மூலம் களங்கப்படுத்தி விட்டதாக கூறி அதன் எதிர்வினையாக இந்த துயர சம்பவம் நடைபெற்றது என சொல்லப்படுகிறது.

இதையடுத்து, நிகழ்ந்த கலவரத்தில் 3,000க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்தியாவிலிருந்து, பஞ்சாப்பை பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என காலிஸ்தானி பயங்கரவாதிகள் இன்றுவரை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கனடா நாட்டில் வலுவாக கால் ஊன்றியுள்ள காலிஸ்தானிகள் அண்மையில் ஊர்வலம் ஒன்றினை அந்நாட்டில் நடத்தி இருக்கின்றனர். அந்த ஊர்வலத்தில், முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி கொடூரமாக சுட்டு கொல்லப்பட்டதை காட்சி படத்தி ஊர்வலம் நடத்தியிருக்கின்றனர். இச்சம்பவத்திற்குதான், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் தனது கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it