ஹிந்து பண்டிகைக்கு பாரதப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அதே வேளையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் வழக்கம் போல ஹிந்துக்களின் பண்டிகையை புறக்கணித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு ஹிந்துக்களின் உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்தும் சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில், ஹிந்து ஆலயங்களை இடிக்கும் காணொளிகளை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். இதனை தொடர்ந்து, கோயம்புத்தூர் பாரதி நகரில் உள்ள பகவான் கிருஷ்ணர் சிலை சேதம், இதையடுத்து, தாம்பரம் பகுதியில் அமைந்து இருந்த ராமர் கோவில் இடிப்பு என அடுக்கடுக்கான சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
அதேபோல, ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் வழிபாட்டு முறைகள் விடியல் ஆட்சியில் மிக கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றன. அதே வேளையில், ஹிந்துக்களின் பாரம்பரிய பண்டிகைகளுக்கும் தடை விதிக்கும் சம்பவங்களும் தமிழகத்தில் தொடர் கதையாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், பாதரதப் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவில், ஆடிக்கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம். நம் சமூகம் நலத்துடனும் வளத்துடனும் விளங்க அவன் அருள் புரியட்டும் என குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், 90% சதவீதம் ஹிந்துக்கள் உள்ள தி.மு.க.வில் அதன் கட்சி தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் வழக்கம் போல ஹிந்துக்களுக்கு வாழ்த்து கூறாமல் மீண்டும் புறக்கணித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.