உங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும். எந்த ஊழல்வாதியும் தப்பிக்கக் கூடாது என பாரப் பிரதமர் மோடி சி.பி.ஐ. வைர விழாவில் கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் பேசும் போது இவ்வாறு கூறினார் ; நாட்டின் சாமானிய மக்களுக்கு சி.பி.ஜ. அமைப்பு நம்பிக்கையும், பலத்தையும் வழங்கியுள்ளது. சி.பி.ஜ. அமைப்பு நீதி வழங்கும் முத்திரையாக மாறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் ஊழல் மிகவும் மோசமாக பரவி இருந்தது.
கடந்த 2014 – ஆம் ஆண்டுக்கு பிறகு ஊழல், கருப்புப் பணத்திற்கு எதிரான ஒரு மிஷன் போன்று நாங்கள் செயல்பட்டோம். அந்தவகையில், வங்கி மோசடிகள், வன விலங்குகள் தொடர்பான மோசடிகள் வரை சி.பி.ஐ.யின் பணி நோக்கம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
தற்போதும் ஊழல் செய்பவர்கள் சில மாநிலங்களில் அரசின் அங்கமாக உள்ளனர். ஆனால், நீங்கள் ( சி.பி.ஜ.) உங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும் எந்த ஊழல்வாதியும் தப்பிக்கக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.