சிறுமியின் உணர்வுபூர்வமான பேச்சால் கண் கலங்கிய மோடி!

சிறுமியின் உணர்வுபூர்வமான பேச்சால் கண் கலங்கிய மோடி!

Share it if you like it

சிறுமி ஒருவரிடம் காணொளி வாயிலாக பாரதப் பிரதமர் மோடி பேசிய பொழுது கண் கலங்கிய சம்பவம் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பெண்களின் பாதுகாப்பு சம்பந்தமான திட்டங்கள் மற்றும் சட்டங்களுக்கு மோடி தலைமையிலான மத்திய அரசு அதிக முன்னுரிமைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பொன்மகள் சேமிப்பு திட்டம், பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டம், பெண்களின் திருமண வயது உயர்வு மற்றும் முத்தலாக் தடை சட்டம் என பெண்கள் சார்ந்த ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தவர் பிரமதர் மோடி.

அந்தவகையில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு கடந்த 9 ஆண்டுகளாக பாரதப் பிரதமர் மோடி பள்ளி கட்டணம் செலுத்தி வருகிறார் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இதுகுறித்து, எல்லாம் இங்குள்ள ஊடகங்கள் பேசாது என்பதே நிதர்சனமான உண்மை.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது பவித்ரமாணிக்கம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர் தனது மகள் ரக்ஷிதாவை. திருவாரூர் கேந்திரிய வித்யாலயாவில் சேர்க்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால், குணசேகரின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் மனம் தளராத அவர் பாரதப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இதற்கு, உடனே பதில் கிடைத்தது மட்டுமில்லாமல், பிரதமர் கோட்டாவிலேயே ரக்சிதாவுக்கு திருவாரூர் கேந்திரிய வித்யாலயாவில் சீட்டு உறுதி செய்யப்பட்டது.

திருவாரூர் குழந்தைக்கு 5 வருடமாக ஸ்கூல் பீஸ் கட்டும் பிரதமர் – ஊடகம் மறைத்த உண்மை..!

இதையடுத்து, தனது மகளை சேர்த்த ஒரு வருடத்திற்கு பின், குணசேகரன் மீண்டும் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். தான் மிகவும் ஏழ்மை உள்ளேன் என்னால் குழந்தையின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை என்று தனது இயலாமையை அக்கடிதத்தில் வெளிப்படுத்தி இருந்தார். அதற்கும், பிரதமரிடமிருந்து உடனடியாக பதில் கிடைத்திருக்கிறது. அந்த வருடத்தில் இருந்து இன்று வரை பிரதமர் அலுவலகமே ரக்ஷிதாவுக்கு கல்வி கட்டணம் செலுத்தி வருகிறது. ஒரு சிறிய கிராமத்தில் இருந்து கடிதம் எழுதிய சாதாரண ஒரு மனிதனின் உணர்வையும் மதித்து கடிதம் எழுதிய பாரதப் பிரதமரின் செயலை இங்குள்ள தமிழக ஊடகங்கள் மறைத்து வருகிறது என்பதே கசப்பான உண்மை.

அந்த வகையில், குஜராத் மக்களிடம் காணொளி வாயிலாக பிரதமர் மோடி உரையாடினார். அப்பொழுது, அயூப் பட்டேல் என்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளி, தன் மகள் மருத்துவம் படிக்க விரும்புவதாக தெரிவித்தார். ஏன்? மருத்துவம் படிக்க வேண்டும், என அவரின் மகளிடம் பிரதமர் மோடி கேட்டதற்கு, “அப்பா படும் கஷ்டங்களை பார்த்து மருத்துவராக வேண்டும் என முடிவெடுத்தேன்” என பதிலளித்தார். இதைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு, கண்கலங்கி சிறிது நேரம் பேசமுடியாமல் நின்றார் பிரதமர் மோடி. கல்வி உதவிக்கு என்ன தேவையாக இருந்தாலும் தன்னை அணுகுமாறும் தெரிவித்தார். இது குறித்த காணொளியை ஜீனியர் விகடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த திருவாரூர் மாணவியின் கல்வி கட்டணத்தை கடந்த 9 வருடங்களாக செலுத்தி வரும் பிரதமர் மோடி. இந்த மாணவியின் வாழ்விலும் நிச்சயம் ஒளியேற்றுவார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.


Share it if you like it