விஜயதசமி இராவணன் வதம் போல தேசத்தின் தீய சக்திகள் அழிக்கப்பட வேண்டும் – தசரா விழாவில் பிரதமர் மோடி பேச்சு

விஜயதசமி இராவணன் வதம் போல தேசத்தின் தீய சக்திகள் அழிக்கப்பட வேண்டும் – தசரா விழாவில் பிரதமர் மோடி பேச்சு

Share it if you like it

கடந்த பத்து தினங்களாக உலகம் முழுவதும் நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் பத்தாம் நாளான நேற்று அதர்மம் அழிந்து தர்மம் நிலைபெற்ற இராவண வதம் எனும் வெற்றி திருநாள் விஜயதசமி கொண்டாட்டத்தோடு விழா நிறைவடைந்தது. நவராத்திரி நாளில் கடுமையான விரதங்கள் அனுஷ்டிக்கும் பிரதமர் மோடி நேற்று புது தில்லியில் நடைபெற்ற தசரா விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். விழாவில் பங்கேற்று பூஜை வழிபாடு செய்த பிரதமர் மோடி ராவண வதம் மூலம் எப்படி அந்நாளில் அதர்மங்கள் அழிக்கப்பட்டதோ ? அதே வழியில் இன்றும் நாட்டில் உள்ள தீமைகள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும். தசரா விழாவில் ராவண உருவ பொம்மையை எரிப்பதை போல மதவாதம் பிராந்திய வாதத்தால் தேசத்தை பிரித்தாளும் சக்திகளையும் எரிக்க வேண்டும். சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும் ஒவ்வொரு சக்தியும் அழிக்கப்பட வேண்டும். நமக்கு கீதையின் நல் அறிவும் இருக்கிறது . ஐ என் எஸ் தேஜஸ் விக்ராந்தை உருவாக்கும் அறிவியல் அறிவும் இருக்கிறது என்று பாரத பிரதமர் மோடி பேசி இருக்கிறார்.

இதன் மூலம் ராவண வதம் என்பதை சித்தரிக்கும் நிகழ்வுகளும் நவராத்திரி பண்டிகை கொண்டாட்டமும் விழாக்கால உற்சவம் மட்டும் அல்ல. அது நம் முன்னோரின் வாழ்வியலையும் அவர்கள் வழிகாட்டுதலையும் நாம் என்றைக்கும் மறக்காது பின்பற்றி வாழ வேண்டும் என்ற படிப்பினையையும் கொடுக்க வல்லது என்பதை பிரதமர் மோடி உரக்கச் சொல்லி இருக்கிறார் ‌ வரலாறு கொடுக்கும் படிப்பினைகளை மறந்து அதன் எதிர்வழியில் பயணிப்போமானால் வரலாற்றின் கடந்த கால துரதிருஷ்டானங்களையும் கொடூரங்களையும் நாம் மீண்டும் மீண்டும் எதிர்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். இதன் மூலம் அந்நாளில் உலகத்தை பீடித்த அதர்மத்தை எப்படி ராமபிரான் தனது ராம பானம் கொண்டு ராவண வதம் என்ற தர்ம யுத்தத்தின் மூலம் அழித்து பிரபஞ்சத்தில் தர்மத்தை நிலை நிறுத்தினாரோ? அதே வழியில் நாமும் ராம ராஜ்ஜியத்தை உள்ளிருந்து சிதைக்கும் வெளியில் இருந்து சிதைக்க நினைப்பவர்களின் முகமாக கரமாக செயல்படும் மதவாதம் பிரிவினைவாதம் பயங்கரவாதம் என்னும் தீய சக்திகளை வேரோடு அழித்து இம்மண்ணின் தேசியத்தையும் தெய்வீகத்தையும் நிலைபெறச் செய்ய வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருக்கிறார்.

வளரும் தலைமுறைகளை மிக எளிதாக மடைமாற்றம் செய்து மூளைச்சலவைக்கு ஆளாக்கி விட்டால் அவர்களைக் கொண்டே இந்த தேசத்தை உள்ளிருந்து அழிப்பதும் அவர்களைக் கொண்டே இந்த தேசத்தை மீண்டும் அடிமைப்படுத்தி ஆக்கிரமிப்பதும் மிகவும் எளிது என்பதே அன்னிய அதர்மிகளின் மனக்கணக்கு. அதை உள்ளிருந்து செயல்படுத்துவதும் வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொடுக்கும் கரங்களாகவும் முகங்களாகவும் இங்கு செயல்படுபவர்கள் தான் வளரும் தலைமுறையை மொழி வாதம் இனவாதம் மதவாதம் பிராந்திய வாதம் என்ற பெயரில் மூளைச்சலவை செய்து அவர்களை பிரிவினைவாதிகளாக மாற்றுகிறார்கள். அந்த பிரிவினை வாதத்தின் துணைகொண்டு இந்த தேசத்தை துண்டாட வேண்டும். அதன் மூலம் ஹிந்துஸ்தானத்தின் தேசியத்தையும் தர்மத்தையும் அடியோடு சிதைக்க வேண்டும் என்று முழுமூச்சோடு சதி செயல்களை அரங்கேற்றுகிறார்கள்.அவர்கள் அழிக்கப் பட வேண்டிய இந்த மண்ணின் விஷ விதைகள் என்பதை பிரதமர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

இங்குள்ள மக்களை எல்லாம் எந்நேரமும் ஒரு அறியாமையிலும் அதிருப்தியிலும் வைத்திருக்க வேண்டும். அதன் மூலம் ஆட்சியாளர்களுக்கும் அரசு எந்திரத்திற்கும் எதிராக அவர்களை திருப்ப வேண்டும். இந்த அதிருப்தியும் அவன் நம்பிக்கையும் அவர்களுக்கு மேலும் மேலும் ஏமாற்றத்தை தரும் போது ஒரு கட்டத்தில் அது அரசுக்கு எதிரான வன்முறையாக வெடிக்கும். அந்த வன்முறையும் கலவரங்களும் பெரும் உயிரிழப்பையும் நீண்ட கால பஞ்சம் வறட்சி உள்நாட்டு சீரழிவுக்கு வழிக்கோலும். அந்த பஞ்சமும் வறட்சியும் தரும் சீரழிவை தங்களுக்கு சாதகமாக்குவதன் மூலம் இந்த தேசத்தின் மதமாற்றத்தையும் அதன் மூலம் நிரந்தரமான காலனி ஆதிக்கத்தையும் நிலைநிறுத்த முடியும் என்பதை இம்மண்ணையும் மக்களையும் ஆக்கிரமிக்க நினைக்கும் அதர்மிகளின் திட்டம். அதற்காகத்தான் அவர்கள் இங்குள்ள மக்களை அரசுக்கு எதிராக மடைமாற்றம் செய்வதையே முழு நேர தொழிலாக கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் சதிகளை தகர்த்து ஹிந்துஸ்தானத்தின் ‌தேசியம் தெய்வீகம் பாதுகாக்க பட வேண்டும். அதற்கு ஹிந்துஸ்தானத்தின் வம்சா வழியினர் தயாராக வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

ராமனின் காலத்தில் ஒரே ஒரு ராவணன் தான் இருந்தான். பத்து தலையோடு இருந்தாலும் ஒற்றை முகம் கொண்ட ராமனால் தர்மத்தின் வழியில் இன்று அவனை வீழ்த்த முடிந்தது. அவ்வகையில் அதர்மம் எவ்வளவு பலமாக விஸ்வரூபம் எடுத்து நின்றாலும் தர்மத்தின் துணைகொண்டு நிச்சயம் அதை சாய்க்க முடியும் என்பதை இராமன் என்னும் தர்மவான் நமக்கு வாழ்ந்து வழிகாட்டி போயிருக்கிறான். இன்று நம் கண் முன் கண்ணுக்குத் தெரிந்த ராவணர்கள் ஆயிரம் பேர் இருந்தால் கண்ணுக்குத் தெரியாத ராவணர்கள் பல கோடி பேர் இருப்பார்கள். அவ்வகையில் நம்மை சூழ்ந்திருக்கும் விரோதத்தை விட துரோகங்கள் அதிகம். அந்த துரோகங்கள் தான் இங்கிருக்கும் மொழிவாத இனவாத பயங்கரவாதிகளுக்கு பெரும் பலம் சேர்க்கிறது . உள்ளிருந்து கொண்டே இல்லாத சாத்தியங்கள் கற்பிப்பது சாத்தியமில்லாத விஷயங்களை எல்லாம் வரலாற்றின் திரிபுகளாக மக்களிடம் விஷம பிரச்சாரம் செய்வது. இவற்றையெல்லாம் மீண்டும் மீண்டும் மக்களின் ஆழ்மனதில் திடமாக பதிய வைத்து இந்த மண்ணிற்கும் மக்களுக்கும் எதிராக அவர்களை திசைதிருப்பும் கருத்தியல்களை பரப்பும் ஊடகவாதிகளில் விஷம் என்று அனைத்துமே அழிக்கப்பட வேண்டிய ராவண முகங்கள் தான் என்பதை பிரதமர் மோடி உறுதி படுத்தி இருக்கிறார்.

நம்மிடம் கீதையின் நல்லறிவும் இருக்கிறது ஐ என் எஸ் விக்ராந்த் உருவாக்கும் அறிவியல் அறிவும் இருக்கிறது என்று பேசியதன் மூலம் ஆழ்ந்த ஆன்மீகத்திற்கும் நவீன அறிவியலுக்கும் பிறப்பிடமாக இருப்பது ஹிந்துஸ்தானமும் அதன் தர்மமும் தான் என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லி இருக்கிறார். இந்த ஆன்மீகத்தின் வழியில் தர்மத்தின் நியதியில் அன்போடு அமைதியாக வாழ்வதையே ஹிந்துஸ்தானம் விரும்புகிறது. அதைத்தான் உலகிற்கும் போதிக்கிறது என்பதை நினைவூட்டி இருக்கிறார். அதே நேரத்தில் தர்மத்தை பாதுகாக்கவும் அதர்மத்தை அழிக்கவும் ஷத்ரிய தர்மத்தின் வழியில் வாழ்வதையும் வீரம் வீரம் துணிவில் நடை போடுவதையும் என்றைக்கும் பாரதம் கைவிடாது என்பதையும் உரக்கச் சொல்லி இருக்கிறார்.

அந்நாளில் திவ்யாஸ்திரங்களும் பிரம்மாஸ்திரங்களும் இராம பாணமும் தர்மத்தை நிலை நிறுத்த உதவியது போல இன்னாளில் அக்னி பிரத்வி தேஜஸ் பிரம்மாஸ் உள்ளிட்டவை இறையருளோடு பயன்படுத்தப்படுவதை எடுத்துக்காட்டுகிறார். ஐ என் எஸ் விக்ராந்த் ராஜ்புத் சிந்து சரஸ்வதி சாகரம் எல்லாம் நவீனமாக கட்டமைக்கப்பட்டாலும் அவை பாரதத்தின் தற்காப்புக்காக அன்றி யாரையும் அச்சுறுத்தவோ அழிக்கும் துர்மதியிலோ இல்லை என்பதை சூசகமாக சொல்லி இருக்கிறார். ஆனால் பாரதத்தின் மண்ணிற்கோ மக்களுக்கோ அச்சுறுத்தல் வருமானால் ஐ என் எஸ் விக்ராந்த் போல பாரதத்தின் ஆயுதங்கள் அத்தனையும் களமிறங்கி தேசத்தை பாதுகாக்கும் என்பதையும் எதிரி நாடுகளுக்கு எச்சரிக்கை செய்திகாக கொடுத்திருக்கிறார்.

ஹிந்துஸ்தானத்தின் மக்களுக்கும் அதன் நலன் விரும்பிகளுக்கும் இது தசரா விழாவின் மூலம் தர்மத்தை நிலை நிறுத்தி அதர்மத்தை அழித்த ஹிந்துஸ்தானத்தின் தர்மத்தின் தாற்பரியத்தை விளக்கும் மேடையாக பிரதமரின் ஆன்மீக சொற்பொழிவாக இருக்கும். ஹிந்துஸ்தானத்தை உள்ளிருந்து சிதைக்க நினைக்கும் உள்நாட்டு துரோகிகளுக்கும் வெளியில் இருந்து இந்த தேசத்தை துண்டாடவும் ஹிந்துஸ்தானத்தை மீண்டும் அடிமைப்படுத்த வேண்டும் என்றும் சதிராடும் அந்நிய சதிகாரர்களுக்கும் பிரதமர் மோடியின் இந்த தசரா விழா பேச்சு மறைமுகமான எச்சரிக்கையாக இருக்கும். அவ்வகையில் தேசத்தின் பிரதமராக மக்களின் நலன் நாடும் காவலராக பிரதமர் அவரது கடமையில் சரியாக பயனிக்கிறார். அவரின் வழியில் மக்களும் தர்மத்தின் வழியில் பயணித்து இந்த தேசத்தையும் தர்மத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் . அதுவே அவருக்கு தேசம் செய்யும் கைமாறாக இருக்க முடியும்.

மொழி இன மத பயங்கரவாத கருத்தியலுக்கு உட்பட்டு மூளைச்சலவையால் பாதிக்கப்படும் மண்ணையும் மக்களையும் இந்த மண்ணின் பாரம்பரிய தேசிய தெய்வீக சித்தாந்தங்களை ஊட்டி விழிப்புணர்வு பெறச் செய்வதன் மூலமே பிரிவினைவாத பயங்கரவாத சித்தாந்தங்களை இங்கிருந்து வேரோடு அகற்ற முடியும். கருத்தியலுக்கு பதில் கருத்தியல் சித்தாந்தங்களுக்கு பதில் சித்தாந்தம் என்னும் அறிவாயுத போரை கொண்டு மட்டுமே இங்குள்ள மக்களிடம் தேசிய தர்ம சிந்தனைகளை வளர்க்க முடியும் .அதன் மூலமே இங்குள்ள சாதிய பிளவுகள் இனமொழி மதவாதங்களை பயங்கரவாத கருத்தியல்களை அகற்ற முடியும். இம்மண்ணில் குடி கொண்டிருக்கும் ராவண முகங்களின் எச்சங்களை ராவணனின் நீட்சியாக இன்றளவும் ஊடுருவி மண்ணையும் மக்களையும் சிதைக்க நினைக்கும் துரோகங்களை நாம் சாய்க்க முடியும். அதற்கு எல்லாம் வல்ல இராமனும் அவன் வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து நின்ற தர்மமும் இந்த மண்ணிற்கும் மக்களுக்கும் என்றைக்கும் துணை நிற்கட்டும். வெற்றி திருநாளான விஜயதசமி நாளின் நடந்து முடிந்த ராவண வதம் யுகங்களைக் கடந்தும் இன்றளவும் மக்களை வழிநடத்தும் தர்மத்தின் நியதி போல என்றைக்கும் தொடர்ந்து மக்களின் மனதில் இருந்து வழி நடத்தட்டும். அதன் மூலம் இங்கிருக்கும் ராவணனின் சொச்சங்களும் எச்சங்களும் மிச்சமின்றி அழிக்கப்படட்டும். அதன் மூலம் இங்கிருக்கும் மொழி இனவாத மத பயங்கரவாத துரோகங்கள் அழிக்கப்படட்டும். ஸ்ரீ ராமனின் ராஜ்ஜியம் தர்மத்தின் வழியில் தெளிந்த நீரோடையாக பயணிக்கட்டும்.


Share it if you like it