உக்ரைனில் சிக்கியுள்ளவர்களை மத்திய அரசு, சிறப்பான முறையில் மீட்டு வருவதாக பலர், கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், தி.மு.க அரசு அமைத்த குழு செய்து வரும் நடவடிக்கைகள், கடும் கோவத்தையும், கொதிப்பையும், ஏற்படுத்தி வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
’ஆப்ரேஷன் கங்கா’ என்னும் திட்டத்தின் மூலம், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மத்திய அரசு தொடர்ந்து மீட்டு வருகிறது. அரசு விமானங்கள், தனியார் விமானங்கள், போர் விமானங்கள் மற்றும் 4 மத்திய அமைச்சர்களை நேரடியாக களத்தில் இறக்கியுள்ளது மோடி அரசு. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் தங்களது குடிமக்களை மீட்க திணறி வருகிறது. ஆனால், இந்திய அரசோ இருநாட்டு அதிபர்களிடமும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, இந்தியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வண்ணம் சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இந்தியாவின் மீட்பு பணியை பார்த்து, மற்ற நாட்டு மாணவர்கள் மத்திய அரசை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இப்படியாக, பாரதப் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் சிறப்பான பணியை மேற்கொண்டு வருகிறது. ஆனால், ஸ்டாலின் அரசு தமிழக மாணவர்களை மீட்டு வருவதற்காக, சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழுவில், எம்.பி.க்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
அந்த வகையில், தமிழக மாணவர்களை மீட்க வேண்டி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம், உக்ரைன் செல்ல உதவி கேட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இரும்பு அடிக்கும் இடத்தில் ’ஈ’-க்கு என்ன வேலை என்று, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, இக்குழுவிடம் காட்டமான முறையில் கேள்வி எழுப்பி இருந்தார். தமிழக மாணவர்களுக்கு, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் உக்ரைன் நாட்டில் பதில் அளிக்கப்படுவதாக, தி.மு.க ஒருவர் பேசியதாக செய்தி வெளியாகி இருப்பது மக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.