உக்ரைனில் போர் நிறுத்தம்: மோடிக்குக் கிடைத்த வெற்றி!

உக்ரைனில் போர் நிறுத்தம்: மோடிக்குக் கிடைத்த வெற்றி!

Share it if you like it

உக்ரைன் மீதான போரை ரஷ்யா தற்காலிகமாக நிறுத்தி இருப்பதற்கு பாரத பிரதமர் மோடியும் ஒரு காரணம் என்பதுதான் ஹைலைட். ஆனால், காழ்ப்புணர்ச்சி காரணமாக தமிழக மீடியாக்கள் இச்செய்தியை புறக்கணித்து வருகின்றன.

நேட்டோ நாடுகளுடன் இணையும் உக்ரைன் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்நாட்டின் மீது போர் தொடுத்திருக்கிறது ரஷ்யா. குறிப்பாக, தலைநகர் கீவ், கார்கீவ் போன்ற நகரங்களின் மீது உச்சகட்ட தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது. இந்த போர் காரணமாக, ஏராளமான வெளிநாட்டினர் உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்களில் இந்தியர்கள்தான் அதிகம். காரணம், மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்பு படிப்பதற்காக ஏராளமான மாணவர்கள் உக்ரைன் நாட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.

எனவே, உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க, பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக, ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி, ஏராளமான விமானங்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் சென்று, இந்தியர்களை பத்திரமாக அழைத்து வருகின்றன.

மேலும், மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் புரி, ஜோதிராதித்திய சிந்தியா, கிரண் ரிஜுஜு, வி.கே.சிங் ஆகியோரை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பி இருக்கிறது. இவர்களும், அங்கு தஞ்சமடைந்திருக்கும் இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை செய்து, பத்திரமாக விமானத்தில் ஏற்றி இந்தியாவுக்கு அனுப்பி வைத்து வருகிறார்கள். தவிர, இந்திய விமானப்படை விமானங்களையும் மீட்புப் பணியில் களமிறக்கி விட்டிருக்கிறார் பிரதமர் மோடி.

இது ஒருபுறம் இருக்க, போரினால் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க உதவும்படி ரஷ்ய அதிபர் புடினிடம் வேண்டுகோள் விடுத்து வந்தார் பாரத பிரதமர் மோடி. இதைத் தொடர்ந்து, போர் நடந்து கொண்டிருந்த சூழலிலும் பிரதமர் மோடியை தொடர்புகொண்டு பேசினார் ரஷ்ய அதிபர் புடின். அப்போது, இந்தியர்கள் வெளியேறும் வகையில் ராணுவ நடவடிக்கை இல்லாத சிறப்பு வழித்தடத்தை உருவாக்குவது தொடர்பாக பரிசீலனை செய்வதாக புடின் உறுதியளித்திருந்தார். இதை ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் அலிபோவும் உறுதிப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில்தான், இந்தியர்கள் மட்டுமல்லாது அனைத்து நாட்டு மக்களும் வெளியேறும் வகையில், மனிதாபிமான அடிப்படையில் உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ரஷ்யா தெரிவித்திருக்கிறது. இது முழுக்க முழுக்க பாரதப் பிரதமர் மோடியின் முயற்சியாலேயே நடந்தது என்பதுதான் சிறப்பம்சம். இதைத் தொடர்ந்து, இந்தியர்கள் மட்டுமல்லாது அனைத்து நாட்டு மக்களும், தலைவர்களும் பாரத பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டு அடிமை ஊடகங்கள், இந்த நிலையிலும்கூட பிரதமர் மோடியையும், பா.ஜ.க. அரசையும் குறைசொல்வதிலேயே குறியாக இருக்கின்றன என்பதுதான் வேதனை.


Share it if you like it

One thought on “உக்ரைனில் போர் நிறுத்தம்: மோடிக்குக் கிடைத்த வெற்றி!

Comments are closed.