250 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் ஆலயம்..!

250 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் ஆலயம்..!

Share it if you like it

பாரதப் பிரதமராக மோடி பதவி ஏற்ற பின்பு நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக இன்று வரை மிக கடுமையாக அவர் உழைத்து வருவதை அனைவரும் நன்கு அறிவர். உள்நாடு, அயல் நாடு, அண்டை நாடு, என பல்வேறு பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு காணாமல் முந்தைய காங்கிரஸ் அரசு செயல்பட்ட காரணத்தினால் நாட்டில் நிம்மதியின்மையும், அமைதியின்மையும், தொடர் கதையாக இருந்து என்பது உண்மை.

  • உ.பி-யில் உள்ள ராமர் கோவில் நிலம் யாருக்கு சொந்தம் என ஹிந்து, முஸ்லீம், மக்களிடையே மிக நீண்ட காலமாக வளர்ந்து வந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
  • இஸ்லாமிய சகோதரிகளின் நீண்ட நாள் கோரிக்கையான முத்தலாக் சட்டத்தை மிக சுலபமாக நடைமுறைக்கு கொண்டு வந்தது.
  • அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சுட்டு கொல்வது முற்றிலும் தடுக்க கடுமையான முயற்சி மேற்கொண்டது.

என பிரதமர் மோடி சிறப்பாக மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கும் நிலையில், பிரதமரின் கனவு திட்டங்களில் ஒன்றாக கூறப்படும் காசி விஸ்வநாதர் ஆலயம் மீண்டும் புதுபொலிவுடன் இன்று காட்சி அளிக்கிறது. இது குறித்த காணொளியை தமிழக பா.ஜ.க தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.


Share it if you like it