அரசு கல்லூரி கட்டணத்தையே தனியார் கல்லூரிகளும் வசூலிக்க வேண்டும் என்று பாரத பிரதமர் மோடி அறிவித்திருப்பது நீட் தேர்வை வைத்து நாடகம் நடத்தும் அரசியல் கட்சிகளுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் விதமாக அமைந்திருக்கிறது என்று மக்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை பூர்த்தி செய்யும் வகையில் நீட் தேர்வினை மத்திய அரசு கொண்டு வந்தது. நீட் தேர்வு என்பது ஏழை மாணவர்களுக்கு வரம், மருத்துவ மாஃபியாக்களுக்கு சாபம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை கேள்விக்குறியாக்கும் வகையில், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்களும், நடிகர் சூர்யா போன்றவர்களும் நீட் விலக்கு தேவை என்று குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசு அறிவித்த அதிரடி அறிவிப்பு பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அதில், மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்று முனைப்புடன் இருக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் தடையற்ற, தரமான மற்றும் குறைந்த கட்டணத்தில் மருத்துவக் கல்வியை உறுதி செய்ய மத்திய அரசு ஒவ்வொரு தடையையும் உடைத்து வருகிறது. இந்த அறிவிப்பின் மூலம், இனி 50% தனியார் கல்லூரி மருத்துவ இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கட்டணத்தில் வழங்கப்பட வேண்டும் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பாரதப் பிரதமர் மோடியின் இந்த அதிரடி அறிவிப்பு நீட் தேர்வை வைத்து அரசியல் நாடகம் நடத்தும் கட்சிகளுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் விதமாக அமைந்திருப்பதாக மக்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.