பாரதியார் பாடலை பாடி அசத்திய அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த சகோதரிகளை பாரதப் பிரதமர் மோடி வெகுவாக பாராட்டி இருக்கிறார்.
பாரதப் பிரதமர் மோடி தமிழ் மொழி மற்றும் தமிழர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அந்த வகையில், தமிழ் மொழியின் மேன்மைள் குறித்து உலகம் முழுவதும் எடுத்து செல்லும் இந்திய தலைவர்களில் மோடி முதன்மையானவராக இருந்து வருகிறார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
இதனிடையே, சுதந்திரத்தின் சுந்தரப் பெருவிழா நிகழ்ச்சி, அருணாச்சல பிரதேச மாநிலத்தின் தூர்தர்ஷன் டி.வி.யில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், அம்மாநிலத்தை சேர்ந்த குமாரி அஷாப்மாய் டெல்லாங் மற்றும் அவரது சகோதரி பெஹெல்டி அமா என இருவரும் சுப்ரமணிய பாரதியின் பாடலை கர்நாடக இசையில் மிக அழகாக பாடி இருக்கின்றனர். இது குறித்து பாரதப் பிரதமர் மோடி, இதைக் கண்டபோது நான் பெரு மகிழ்ச்சியும் உவகையும் கொண்டேன். ஒரே இந்தியா உன்னத இந்தியா கோட்பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழில் பாடியுள்ள அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சக்தியின் நட்சத்திரங்களுக்கு எனது பாராட்டுக்கள் என தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இரு சகோதரிகள், பாரதியார் பாடலை மிக அழகாக பாடி இருக்கின்றனர். ஆனால், தமிழகத்தை சேர்ந்த சில தலைவர்களுக்கு, துண்டு சீட்டை பார்த்து கூட தமிழை சரியாக படிக்க தெரியவில்லை என கிண்டல் செய்து வருகின்றனர்.