பா.ஜ.க. மூத்த தலைவர் மோடி, பிரதமர் பதவியில் இன்னும் எத்தனை ஆண்டுகள் இருப்பார் என பிரபல ஜோதிடர் அனிருத் மிஸ்ரா கணித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க.வின் மூத்த தலைவராக இருப்பவர் மோடி. இவர், கடந்த 2014 – ஆம் ஆண்டு பாரதப் பிரதமராக பதவி ஏற்றார். இதையடுத்து, பா.ஜ.க.வின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்து வருகிறது. அதே வேளையில், முந்தைய காங்கிரஸ் அரசு போல் அல்லாமல் பா.ஜ.க. இந்தியாவை வல்லரசாக மாற்றும் கனவோடு மிக தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறது. இதன் காரணமாக, நாட்டின் பொருளாதாரம், ராணுவ உள்கட்டமைப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தி வேகமாக முன்னேறி வருகிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து பல்வேறு சதிச் செயல்களை மேற்கொண்டு வருகின்றன.
இந்திய தேசத்தின் நலனை கருத்தில் கொண்டு, மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும் என்பதே ஒட்டு மொத்த நாட்டு மக்களின் விருப்பமாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், பிரபல ஜோதிடர் அனிருத் குமார் மிஸ்ரா, மோடி ஆரோக்கியமாக இருப்பார். அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அவர் பிரதமராக இருப்பார் என கணித்து இருக்கிறார். இதனிடையே, உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவருக்கும் பிரதமர் ஆகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பு கணித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடியை சமாளிக்க முடியாமல் தி.மு.க, காங்கிரஸ் மற்றும் உள்ளுர் போராளிகள் இன்று வரை கதறி வருகின்றனர். அடுத்து வரும் இரு பிரதமர்களை இவர்கள் எப்படி? சமாளிக்க போகிறார்கள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.