well done Modi..! ஸ்டாலினுக்கு பிரதமர் பதிலடி: மூத்த பத்திரிக்கையாளர் கருத்து!

well done Modi..! ஸ்டாலினுக்கு பிரதமர் பதிலடி: மூத்த பத்திரிக்கையாளர் கருத்து!

Share it if you like it

பாரதப் பிரதமரின் நுண் அரசியல் மூத்த பத்திரிக்கையாளர் கருத்து.

தமிழகம் நன்கு அறிந்த மூத்த பத்திரிக்கையாளர் மாலன் நாராயணன். இவர், தனது முகநூல் பக்கத்தில் பாரதப் பிரதமர் மோடி செய்த நுண் அரசியல் குறித்து பதிவு செய்துள்ளார். இதனை, ஒரே நாடு ஆசிரியர் நம்பி நாராயணன் தனது முகநூல் பகிர்ந்துள்ளார்.

மாலன் நாராயணன் முகநூல் பதிவு இதோ;

Well done PM!
நுண் அரசியல் நுண் அரசியல் என்று பலர் அவ்வப்போது எழுதியும் பேசியும் வருவதுண்டு. அது என்ன என்பதை இன்றைக்கு நடைமுறையில் புரிய வைத்தார் மோதி. மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது புறக்கணிக்கிறது என்று வாய் கூசாமல் தேர்தல் களங்களில் தி.மு.க பேசுவது வழக்கம். இன்று தி.மு.க தலைவரை மேடையில் வைத்துக் கொண்டே 31-ஆயிரம் கோடி 500 லட்சம் ரூபாயில் நிறைவற்றப்பட்ட, தொடங்கப்பட உள்ள திட்டங்களை திறந்து வைத்தார் மோதி.

இவையெல்லாம் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் தொடங்கப்பட்ட திட்டங்கள் அல்ல. அது ஆட்சிக்கு வரும் முன் தொடங்கப்பட்டு இப்போது நிறைவேறியிருப்பவை. தி.மு.க.வின் பச்சைப் பொய்களை அதன் தலைவரை மேடையில் வைத்துக் கொண்டு நயமாகத் தோலுரித்தார் மோதி. செவித் திறன் இழந்தோர் ஒலிம்பிக்சில் வென்றோரில் பலர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிவீர்களா? என்று கேள்வி வீசி, அவர்களை நம் முதல்வர் சந்திக்கக் கூட இல்லை மறைமுகமாக நினைவூட்டினார்

தமிழின் எதிர்காலம் அது அடுத்த தலைமுறையிடமும் தொடர்வதில் இருக்கிறது வெறுமனே அதன் தொன்மையில் மட்டுமில்லை அதற்கு தாய் மொழி வழிக் கல்வி அதற்குத்தான் புதிய கல்விக் கொள்கை, அதை மறுக்கிறீர்களே என்று நைசாக ஊசி சொருகினார். அதே நேரம் நீங்கள் மத்திய அரசில் அங்கம் வகித்த போது செம்மொழித் தமிழ் நிறுவனம் வாடகைக்கு ஒண்டுக் குடித்தனம் இருந்ததே என்பதை நினைவூட்டுவது போல, இப்போது அது முழுக்க முழுக்க எங்கள் அரசின் நிதியில் கட்டப்பட்ட நவீன கட்டிடத்தில் இயங்குகிறது என்பதை அடக்கத்தோடு குறிப்பிட்டார். என் தொகுதியில் பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தில் அதன் முன்னாள் மாணவர் பாரதி பெயரில் தமிழ்த்துறை தொடங்கியிருக்கிறோம். நீங்க என்ன செய்தீர்கள் என்று கேட்காமல் கேட்டார்.

வளர்ந்து கொண்டிருக்கும் நாடு வளர்ந்த நாடாக வளர்ச்சி பெற வேண்டுமானால் உள்கட்டமைப்புகள் உருவாக வேண்டும். உள்கட்டமைப்பு என்பது சாலை, தண்ணீர், மின்சாரம் மட்டுமல்ல, அது குறித்த புதிய பார்வை அணுகுமுறை வேண்டும் என்று உணர்த்தினார். குழாயில் எல்லோருக்கும் தண்ணீர் வரும் போது பேதங்கள் தானே குறையும் என்பதை நினைவூட்டினார். யாழ்ப்பாணத்திற்குச் சென்ற முதல் பிரதமர் நான் என்பதை நினைவு கூர்ந்ததன் மூலம் நீங்கள் அங்கம் வகித்த அரசின் பிரதமர் மன்மோகன் சிங் போகதது பற்றி சொல்லாமல் சொல்லி அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்காமல் கேட்டார்.

உங்கள் கட்சிக்காரர்கள் போய் ராஜபக்ஷவுடன் விருந்துண்டு , நினைவுப் பரிசு பெற்றுக் கொண்டு வந்தீர்களே என வெளிப்படையாகக் கேளாததில் அவரது நாகரீகம் புலப்பட்டது. அன்றைக்கு கச்சத்தீவை வாரிக் கொடுத்துவிட்டு இன்று ‘மீட்பதற்கான தருணம்’ எனப் பேச உங்களுக்கு நாக்கூசாதா என்றும் கேட்காதது அவர் பெருந்தன்மை. புதிதாக ஏதுமில்லாத தமிழக முதல்வரின் வழக்கமான பல்லவிக்கு பதில் ஏதும் சொல்லாமல் ஒதுக்கிவிட்டது ஸ்மார்ட்னெஸ். மோதியின் நுண் அரசியலின் கிளைமாக்ஸ், சட்டமன்றத்தில் ஜெய்ஹிந்த் சொல்லாததைப் பெருமையாக பீற்றிக் கொண்ட கட்சியின் முதல்வரை மேடையில் வைத்துக் கொண்டே பாரத் மாதா கீ ஜெய், வந்தே மாதரம் இரண்டையும் முழங்கி அதையும் கூட்டத்தினரையும் திருப்பி முழங்கச் செய்தாரே அதுதான்!
well done Modi!

/https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02k7KME9dXXKviXrYt6aMuDrPeDMaRLY6FbbX5zHAULtojZ1BjMwjKPZRuQcqjwgSnl&id=1785195964&sfnsn=wiwspwa


Share it if you like it