பிரதமர் குறித்து விமர்சனம்: மேடையில் இருந்து இறக்கி விட்ட பொதுமக்கள்!

பிரதமர் குறித்து விமர்சனம்: மேடையில் இருந்து இறக்கி விட்ட பொதுமக்கள்!

Share it if you like it

பிரதமர் குறித்து விமர்சனம் செய்த வி.சி.க தலைவரை மேடையில் இருந்து வெளியேற்றிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவராக இருப்பவர் திருமாவளவன். இவர், மத்திய அரசு, பாரதப் பிரதமர் மோடி மற்றும் ஹிந்து மதத்திற்கு எதிராக வன்மம் நிறைந்த கருத்துக்களை தெரிவிக்க கூடியவர். குறிப்பாக, ஹிந்துக்களின் மனம் புண்படும் படி தொடர்ந்து பேசக்கூடியவர். பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு நல்வழி காட்டாமல் அடங்க மறு, அத்தூமீறு, திமிறி எழு, திருப்பி அடி என கூறும் இவரா நல்ல தலைவர் என்பது பலரின் குற்றச்சாட்டாகவும் கருத்தாகவும் உள்ளது.

பட்டியல் சமூகத்தின் தலைவராக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் திருமாவளவன். அதே பட்டியல், சமூகத்தை சேர்ந்தவர்கள் தி.மு.க ஆட்சியில் தொடர்ந்து பாதிக்கப்படும் பொழுது அதை கண்டும் காணாமல் கடந்து செல்வது இவரின் வழக்கம். அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் அகல்யா-22 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். இவரை, தி.மு.க.வை சேர்ந்த இரண்டு நிர்வாகிகள் மற்றும் நான்கு பள்ளி மாணவர்கள் உட்பட எட்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இச்சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு, தனது கண்டனத்தையோ எதிர்ப்பினையோ பதிவு செய்யாதவர் இதே திருமாவளவன் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

Image

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக திருமாவளவன் கலந்து கொண்டார். இதையடுத்து, பேசிய திருமாவளவன் வழக்கம் போல பாரதப் பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார். இதுதவிர, அவரை ஒரு வில்லன் என்று கூறியிருந்தார். வி.சி.க தலைவரின் இந்த கருத்து மேடையில் இருந்த பலருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து, திருமாவின் பேச்சை உடனே நிறுத்த வேண்டும் என பலர் கோஷம் எழுப்பியுள்ளனர். இதற்கு, மேலும் திருமாவை பேச அனுமதித்தால் நம்ம நிலைமை அதோ கதி என்று அஞ்சிய விழா ஏற்பாட்டாளர்கள், திருமாவை பாதுகாப்பாக மேடையில் இருந்து வேக வேகமாக கீழே இறக்க முயன்றுள்ளனர். இதனிடையே, மேடையில் இருந்த பட்டபத் ஸ்ரீனிவாசன் என்பவர் பிரதமர் மோடி வில்லன் இல்லை… அவர் இந்திய நாட்டின் ஹீரோ என்று திருமாவை நோஸ் கட் செய்த சம்பவம் தான் ஹைலட் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it