கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற முகமது உசேன், பசுலுதீன் ஆகியோர் கைது !

கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற முகமது உசேன், பசுலுதீன் ஆகியோர் கைது !

Share it if you like it

சென்னை, வியாசர்பாடி, சாமியார்தோப்பு மூன்றாவது தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், வியாசர்பாடி, எண்ணுார் நெடுஞ்சாலையில் பெட்டி கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த மர்ம நபர், பொருட்களை வாங்கி, 200 ரூபாய் கொடுத்துள்ளார். அதை பார்த்த ராஜேந்திரன், கள்ளநோட்டு என்பதை அறிந்து, பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், வியாசர்பாடி, எஸ்.ஏ.காலனி மூன்றாவது தெருவைச் சேர்ந்த முகமது இட்ரஸ், என்பதும், இவர் யானைக்கவுனி, வால்டாக்ஸ் ரோடு நடைமேடையில் குளிர்சாதன பெட்டி கடை வைத்துள்ளதும் தெரிய வந்தது.

மேலும், திருவொற்றியூரைச் சேர்ந்த நீண்ட கால பள்ளி நண்பரான முகமது யூனுஸ் என்பவரின் அப்பா முகமது உசேன் என்பவரிடம் இருந்து, கடந்த வாரம் 2,000 ரூபாய் கொடுத்து 4,000 ரூபாய்க்கு 200 ரூபாய்களாக கள்ளநோட்டை பெற்றுள்ளார்.

அந்த நோட்டை மாற்றிய பின், 5,000 கொடுத்து 200 ரூபாய் நோட்டுகளாக 10,000 ரூபாய் வாங்கி அனைத்து நோட்டுகளும் மாற்றிய நிலையில், கடைசியாக இருந்த ஆறு 200 ரூபாய் நோட்டுகளை மாற்றும்போது மாட்டி கொண்டது தெரிய வந்தது.இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் கொடுத்த தகவலின்படி, தலைமறைவாக இருந்த திருவொற்றியூர், தாங்கல் பகுதியைச் சேர்ந்த முகமது உசேன், ராயபுரம், தொப்பை தெருவை சேர்ந்த பசுலுதீன், ஆகியோரையும் போலீசார் நேற்று மாலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Share it if you like it