ஹிந்துவாக மதம் மாறிய முகமதுவிற்கு அவரது சகோதரர் வாசிம் கொலை மிரட்டல் விடுத்து இருக்கும் சம்பவம் உ.பி.யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் முகமது சலீம் ஹைதர். இவர், தனது குடும்பத்துடன் லக்னோ பைசாபாத் சாலையில் உள்ள ஸ்பீங் ரிங் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர், இஸ்லாம் மதத்தில் இருந்து விலகி அண்மையில் ஹிந்து மதத்தை தழுவி இருக்கிறார். மேலும், தனது பெயரை ராஜ்வீர் சிங் என மாற்றி இருக்கிறார். திடீரென, முகமது ஹிந்து மதம் மாறியது அவரது தம்பி வாசிமிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து, அவர் தனது சகோதரர் குடும்பத்திற்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்.
இதையடுத்து, ராஜ்வீரின் மனைவி மற்றும் அவரது மகள் தாங்களும் ஹிந்து மதத்திற்கு திரும்ப உள்ளோம் என்று கூறியிருக்கின்றனர். இதற்கு, வாசிம் தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்தது மட்டுமில்லாமல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் துணையுடன் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்தான, செய்தியினை பிரபல ஊடகமான தாமரை வெளியிட்டு இருக்கிறது.