கிறிஸ்தவ சபை நடத்தும் பள்ளிகளின் நிர்வாகிகள் பணத்தை கொள்ளையடிக்கின்றனர் என்று கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கிறிஸ்தவ மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் மதபோதகர் மோகன் சி லாசரஸ். ஹிந்துக்களையும், ஹிந்து கோயில்களையும், ஹிந்து மத உணர்வுகளையும் தொடர்ந்து புண்படுத்தி பேசி வருவதையே இன்று வரை வாடிக்கையாக கொண்டவர். கொரோனா தொற்று தமிழகத்தில் தீவிரமாக பரவிய சமயத்தில் தேவனுக்கு தசமபாகத்தை செலுத்த வேண்டும். அப்படி செலுத்தாவிட்டால் நீ ஒரு திருடன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றினை பதிவு செய்து கிறிஸ்தவ மக்களின் உள்ளத்தையும் காயப்படுத்தி இருந்தார்.
ஹிந்து மக்களின் வழிபாட்டு முறை, கலாசாரம், பண்பாடு, விக்கிரக ஆராதனை போன்றவற்றை மிக கடுமையாக விமர்சனம் செய்து வருவது ஒருபுறம் என்றால், கிறிஸ்தவ மக்களின் உணர்வுகளையும் அவ்வப்போது இழிவுப்படுத்தி வருகிறார் என்று கிறிஸ்தவ மக்களே மோகன் சி லாசரஸ் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இந்த நிலையில்தான், சர்ச்கள் நடத்தும் பள்ளிகளில் மிகப் பெரிய ஊழல் நடைபெறுகிறது. என்று மோகன் சி லாசரஸ் கூறியிருக்கிறார். இந்த காணொளி கிறிஸ்தவ மக்கள் மத்தியில் வைரலாகப் பரவி வருகிறது.
சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் மதம் மாற மறுத்ததால் டார்ச்சர் செய்யப்பட்டு பிளஸ் 2 மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலையில், மோகன் சி லாசரஸ் இப்படியொரு கருத்தை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.