விக்கிரக ஆராதனை நடைபெறும் இடங்களில் விபச்சாரம் நடைபெறுகிறது என்று மோகன் சி லாசரஸ் தெரிவித்த கருத்திற்கு குவியும் கண்டனம்.
கிறிஸ்தவ மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் மதபோதகர் மோகன் சி லாசரஸ். ஹிந்துக்களையும், ஹிந்து மத உணர்வுகளையும் தொடர்ந்து புண்படுத்தி பேசி வருவதையே வாடிக்கையாக கொண்டவர். கொரோனா தொற்று தமிழகத்தில் தீவிரமாக பரவிய சமயத்தில் தேவனுக்கு செலுத்த வேண்டிய தசமபாகத்தை சரியாக செலுத்தாவிட்டால், நீ ஒரு திருடன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றினை பதிவு செய்து இருந்தார். இது கிறிஸ்தவ மக்களின் உள்ளத்தை காயப்படுத்தி விட்டது என்று அந்நாட்களில் பலர் அவரின் பதிவிற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

சமீபத்தில் தான் மோகன் சி லாசரஸ் அவர்கள் விக்ரக ஆராதனை குறித்து தெரிவித்த கருத்து கடும் சர்ச்சை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்களின், உணர்வுகளை மீண்டும் புண்படுத்தும் விதமாக விக்ர ஆராதனை குறித்தும், வேளாங்கண்ணி குறித்தும் மோகன் சி லாசரஸ் பேசிய கருத்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஹிந்து மற்றும் கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கை, வழிபாட்டு முறை, அவர்களின் உணர்வுகளை தொடர்ந்து இழிவுப்படுத்தி இரு சமூக மக்களின் நம்பிக்கையை காயப்படுத்தி வரும் மோகன் சி லாசரஸ் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? அல்லது ஹிந்து ஆலயங்களை தொடர்ந்து இடிப்பதிலேயே முழு கவனம் செலுத்துமா? என்று பலர் வினவி வருகின்றர்.