தமிழகத்தில் மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வந்தால், ஏற்கெனவே ஒரு தலைவருக்கு நேர்ந்த கதிதான் ஏற்படும் என்று கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி.லாசரஸ் திமிராக பேசியிருப்பது ஹிந்து அமைப்புகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படித்தி இருக்கிறது.
அந்நிய சக்திகள் போடும் எலும்புத் துண்டுக்கு வாலாட்டிக் கொண்டு, அப்பாவி ஏழை, எளிய மக்களின் இயலாமையை பயன்படுத்தி ஆசைவார்த்தைகளை கூறி தங்களது மதத்திற்கு மாற்றுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன கிறிஸ்தவ மிஷ’நரி’கள். அப்படி மதம் மாறிய அப்பாவி மக்களை மூளைச்சலவை செய்து, நாட்டிற்கு எதிராகவும், சமூகத்திற்கு எதிராகவும் திருப்பும் அபாயம் இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த வகையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு பின்னணியில் மதமாற்று கும்பல்களின் கைவரிசை இருந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்றன.
சட்டம் இயற்றும் அதிகாரம் எனக்கு இருந்தால், நான் முதலில் கொண்டு வரும் சட்டம் மதமாற்ற தடைச் சட்டமே என்று மகாத்மா காந்தி கூறியதாக இன்றுவரை கருத்து நிலவுகிறது. ஆனால், தற்போது மதமாற்றம் என்பது ஒரு தேசிய அபாயமாக மாறிவரும் நிலையில், கிறிஸ்தவ மக்களின் மத்தியில் நன்கு அறிமுகமானவரும், ஹிந்துக்களை இழிவுப்படுத்தி வருவதையே நோக்கமாகக் கொண்டவருமான கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி.லாசரஸ், மதமாற்ற தடைச் சட்டம் குறித்து திமிராக பேசியிருக்கிறார். அதாவது, தமிழகத்தில் மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வந்த ஒரு தலைவருக்கும், அதற்குக் காரணமாக இருந்தவருக்கும் என்ன நடந்தது என்பதை உலகமே அறியும் என்று மிரட்டல் தொணியில் பேசியிருக்கிறார். இந்த காணொளிதான் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஹிந்து அமைப்புகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, மோகன் சி.லாசரஸின் பேச்சு அ.தி.மு.க.வினரிடையேயும் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.