PM சூர்யா கர் யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி கடந்த மாதத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் 1 கோடி பயனாளர்கள் பதிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இத்திட்டத்திற்கான ஆன்லைன் பதிவு கடந்த மாதத்திலேயே தொடங்கப்பட்டுவிட்டது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து பயனாளிகளுக்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், ஒருவரின் வீட்டின் மேற்கூரையில் சோலார் பேனல் பொருத்தப்படும், அதில் பயனாளிகளுக்கு மத்திய அரசு ரூ.75 கோடி முதலீடு செய்யும். மேலும், பயனாளிகளுக்கு அரசு மானியம் வழங்கும் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
சிறப்பான செய்தி !
இது தொடங்கப்பட்ட ஒரு மாதத்தில், PM சூர்யா கர் யோஜனாக்காக 1 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் ஏற்கனவே தங்களை பதிவு செய்துள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பதிவுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அஸ்ஸாம், பீகார், குஜராத், மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் 5 லட்சத்திற்கும் அதிகமான பதிவுகள் நடந்துள்ளன.
மின் உற்பத்தியை உறுதி செய்வதோடு, வீடுகளுக்கான மின்சார செலவினங்களில் கணிசமான குறைப்புகளை இந்த முன்முயற்சி உறுதியளிக்கிறது. சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறையை (LiFE) பெரிய அளவில் ஊக்குவிக்க இது தயாராக உள்ளது, இது ஒரு சிறந்த கிரகத்திற்கு பங்களிக்கிறது.
இதுவரை பதிவு செய்யாதவர்களும் விரைவில் பதிவு செய்ய வேண்டும்.