ஜோடோ யாத்திரை: எம்.பி. ஜோதிமணி புகார்… காங்., மூத்த தலைவர் பகீர் சவால்!

ஜோடோ யாத்திரை: எம்.பி. ஜோதிமணி புகார்… காங்., மூத்த தலைவர் பகீர் சவால்!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் எம்.பி. ஜோதிமணிக்கு இடையே மோதல் ஏற்பட்டு இருக்கும் சம்பவம் அக்கட்சியில் பெரும் புயலை வீசி இருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ’பாரத் ஜோடோ யாத்திரா’ எனும் பெயரில் நடைப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இந்த, நடைப்பயணம் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் துவங்கி காஷ்மீரில் நிறைவு பெறும் விதமாக திட்டமிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், 150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் செல்ல காங்கிரஸ் மேலிடம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. தமிழகத்தில் ராகுல் காந்தி, சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அவருடன் காங்கிரஸ் எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் பொன். கிருஷ்ணமூர்த்தி குறித்து கரூர் எம்.பி. ஜோதிமணி சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு, அவர் கூறிய பதில் இதோ; ராகுல் காந்தி கன்னியாகுமரி வருகையை முன்னிட்டு நான் நிறைய வசூல் செய்து விட்டதாக ஒரு முக்கிய தலைவர் ஒருவரிடம் கூறி உள்ளீர்கள். இதை நீங்கள் நிரூபித்தால் என்னுடைய மாநில துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். இல்லையெனில், உங்கள் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய நீங்கள் தயாரா? என ஜோதிமணிக்கு அவர் சவால் விடுத்து இருக்கும் சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it