தாணுலிங்க நாடார், கன்னியாகுமரி மாவட்டத்தில், 1915 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி, பொற்றையடி கிராமத்தில் பிறந்தார். சிறு வயதிலிருந்தே, இந்து மதத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இந்து மதத்தை மிகுந்த பக்தியுடன் கடைபிடித்தார். சில காலம் காவல் துறையில் பணிபுரிந்த அவர், ராணுவத்தில் சேர்ந்தார். சட்டப் பட்டம் பெற்று, மாவட்ட நீதிமன்றத்தில் சில காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். ராணுவம், வக்கீல் மற்றும் ஆசிரியராக பணி புரிந்தார்.
1946 ஆம் ஆண்டில், திருத்தமிழர் இயக்கத்தில் உறுப்பினரானார். 1947 ஆம் ஆண்டில், திருத்தமிழர் இயக்க ஐவர் போராட்டக் குழுவில் ஒருவரானார். மண்டைக் காடு கலவரத்தை ஒட்டி, எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது, ஒரு சம்பவம் நடந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். இந்துக்களை காக்க குறிப்பிடத்தக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்போது, தாணுலிங்க நாடார், எம்.ஜி.ஆரிடம் நேரடியாகவும், தெளிவாகவும் பேசினார்.
1951 ஆண்டு, தமிழ்நாடு திருவிதாங்கூர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1951 கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாட்டுடன் இணைந்தது. 1957 ஆம் ஆண்டு, நாகர் கோவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1964 நாடாளுமன்ற ராஜ்ய சபை உறுப்பினராக இருந்தார்.
1971 ல், தாணுலிங்க நாடார் காங்கிரசை விட்டு வெளியேறினார். 1982 இந்து முன்னணித் தலைவராக பொறுப்பேற்றார், 1987 அம் ஆண்டு, நாகபுரியில் ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி விழாவில் தலைமை தாங்கினார். இராம. கோபலன் அவர்களோடு இணைந்து, இந்து முன்னணி மாநிலத் தலைவர் பணியை தொடர்ந்தார். 1988 ஆம் ஆண்டு, டாக்டர் ஹெட்கேவார் நூற்றாண்டு விழா கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது காலமானார்.
டாக்டர்.எஸ்.பத்மப்ரியா