தாணுலிங்க நாடார், கன்னியாகுமரி மாவட்டத்தில், 1915 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி, பொற்றையடி கிராமத்தில் பிறந்தார். சிறு வயதிலிருந்தே, இந்து மதத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இந்து மதத்தை மிகுந்த பக்தியுடன் கடைபிடித்தார். சில காலம் காவல் துறையில் பணிபுரிந்த அவர், ராணுவத்தில் சேர்ந்தார். சட்டப் பட்டம் பெற்று, மாவட்ட நீதிமன்றத்தில் சில காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். ராணுவம், வக்கீல் மற்றும் ஆசிரியராக பணி புரிந்தார்.
அரசியல் :
இளமையில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டார். ஏ. நேசமணி நிறுவிய திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு கட்சியில் இணைந்து, குமரி விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டார்.
தாணுலிங்க நாடார், அகஸ்தீஸ்வரம் சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து, 1948, 1951 மற்றும் 1954ம் ஆண்டுகளில் திருவிதாங்கூர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தேடுக்கப்பட்டார்.
1957ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக, தாணுலிங்க நாடார், நாகர்கோவில் மக்களவைத் தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்ற மக்களவை (இந்தியா)|மக்களவை]] உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தாணுலிங்க நாடார், 9 சூலை 1964 முதல் 2 ஏப்ரல் 1968 முடிய இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றியவர்
1984 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்துக்களுக்கு புத்துணர்ச்சி அளித்தார்.
13-7-1987 அன்று கன்னியாகுமரி மாவட்டம் மூஞ்சிறை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கும் பைபிள் கொடுத்த செயலைக் கண்டித்தும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். மறுநாள் தலைமை ஆசிரியர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டதால் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
2-10-1987 அன்று நாகபுரியில் ஆர்.எஸ்.எஸ் நடத்திய விஜயதசமி விழாவில் தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றும் பெருமை பெற்றார்.
1988 ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நிறுவனர் டாக்டர் ஹெட்கோவார் நூற்றாண்டு விழா செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
3-10-1988 அன்று திருநெல்வேலி மாவட்டம் ஏரலில் நடந்த டாக்டர் ஜி நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் சித்தரகுப்தன் எனது ஏட்டை புரட்டிக் கொண்டிருக்கிறான். எனவே இளைஞர்களே தேசப் பணியாற்ற வாருங்கள் என்று அறைகூவல் விடுத்தவாறு மேடையிலேயே காலமானார்.
ஐயா தாணுலிங்க நாடார் பிறந்த தினத்தை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது : சுதந்திரப் போராட்ட வீரரும், கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைப்பதற்கு முன்னின்று போராடியவர்களில் ஒருவருமான ஐயா சுதந்திரப் போராட்ட வீரரும், கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைப்பதற்கு முன்னின்று போராடியவர்களில் ஒருவருமான ஐயா தாணுலிங்க நாடார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
நாடாளுன்ற உறுப்பினராகவும், இந்து முன்னணி இயக்கத்தின் முதல் மாநிலத் தலைவராகவும் அவர் மேற்கொண்ட கல்விப் பணிகளும், ஆன்மீகப் பணிகளும், சமூகப் பணிகளும் என்றும் அவரது பெருமையைக் கூறும். தமிழக பாஜக சார்பாக அவரது புகழை போற்றி வணங்குகிறோம்.