எந்த ஆட்சியில்தான் கொலை, கொள்ளை நடக்கவில்லை: சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது – முத்தரசன் புகழாரம்!

எந்த ஆட்சியில்தான் கொலை, கொள்ளை நடக்கவில்லை: சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது – முத்தரசன் புகழாரம்!

Share it if you like it

மன்னர்கள் ஆட்சியிலும் கொலை நடந்தது. அ.தி.மு.க., ஆட்சியிலும் கொலை நடந்ததுள்ளது என தி.மு.க.விற்கு முட்டு கொடுக்கும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பேசியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

‘எங்களுக்கு வேலை வேண்டும்’ என்ற முழக்கத்தோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பெருமன்றம் சார்பில் கடந்த 23-ம் தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரை நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் நடைபெற்று வரும் விழிப்புணர்வு பிரசாரத்தின் இறுதி நிகழ்வாக வருகின்ற 2-ம் தேதி திருச்சியில் மாநாடு நடைபெற உள்ளது. அந்தவகையில், மாநாட்டின் ஏற்பாடுகளை பார்வையிட இந்திய கம்யூனிஸ் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சி வந்தார். அதன்படி, திருச்சி பெரியமிளகுபாறையில் உள்ள சி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசும் போது இவ்வாறு கூறினார் :

“தமிழக கல்வித்துறை எவ்வித பிரச்னைகளும் இல்லாமல் சிறப்பாக இயங்கி வருகிறது. கொரோனா காலத்தால் அதில் சில பிரச்னைகள் ஏற்பட்டிருக்கின்றன. தேர்வெழுத வாய்ப்பு கொடுத்தும் மாணவர்கள் தேர்வெழுத வராதது கவலைக்குரிய விஷயம். தமிழக அரசு அதை பரிசீலித்து, எதார்த்தமான உண்மைகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்களைப் பொறுத்தமட்டில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாகத் தான் இருக்கிறது. கொலை, கொள்ளை நடந்துக்கிட்டே தான் இருக்கும். எந்த ஆட்சியிலயும் இதெல்லாம் நடக்காமல் இருக்காது. மன்னர்கள் ஆட்சியிலும் கொலை நடந்தது. அ.தி.மு.க., ஆட்சியிலும் ஜெயலலிதாவுடைய கொடநாடு பங்களாவில் கூட கொலை நடந்தது. இப்போது நடக்கும் குற்றங்களுக்கு அரசு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் நடக்கும் பிரச்னைகளுக்கு நாங்கள் கண்டன அறிக்கை வெளியிட்டும், போராட்டங்களையும் நடத்தி வருகிறோம். அப்படியிருக்க தி.மு.க., ஆட்சி ஒழிக என்று நாங்கள் போராட்டம் நடத்த முடியாது. அப்படி போராட்டம் நடத்தவும் மாட்டோம். நாங்க சைலன்டாக எல்லாம் இல்லை. ‘கம்யூனிஸ்டுகள் சைலண்டாக இருக்கிறார்கள். அ.தி.மு.க., ஆட்சியில் போராட்டம் நடத்தியவர்கள் தி.மு.க., தோழமைக் கட்சி என்பதால் இப்போது அமைதியாக இருக்கிறார்கள்’ என நாங்கள் சைலண்டாக இருப்பதைப் போல் ஊடகங்களில் ஒரு சிலர் கருத்துகளைப் பரப்புகிறார்கள்” என்று கூறினார்.


Share it if you like it