என் மண் என் தேசம் அமிர்த கலச யாத்திரை அமிர்த வாட்டிகா கட்டுமானமாக நிலைபெறும் – படேலின் 148 வது பிறந்தநாளில் பிரதமர் மோடி பெருமிதம்

என் மண் என் தேசம் அமிர்த கலச யாத்திரை அமிர்த வாட்டிகா கட்டுமானமாக நிலைபெறும் – படேலின் 148 வது பிறந்தநாளில் பிரதமர் மோடி பெருமிதம்

Share it if you like it

சுதந்திரப் பாரதத்தில் 75 ஆண்டுகள் நிறைவுற்ற தன் அமிர்தோற்ஸவம் கொண்டாட்டம் நாடு முழுவதும் சுதந்திர அமுத பெருவிழாவாக கடந்த ஆண்டு தொடங்கியது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாளில் அந்த அமிர்த உற்சவ பெருவிழா நிறைவுற்றது. இந்த விழாவின் நிறைவை கௌரவிக்கும் விதமாக கடந்த ஆகஸ்ட் 15ஆம் நாளில் அமிர்த கலச யாத்திரை உற்சவத்தை பிரதமர் மோடி முன் மொழிந்தார். அதன் வழியில் நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சிகளில் இருந்து பிடி மண் சேகரிக்கப்பட்டு அவை அனைத்தும் தலைநகரில் அமிர்த கலச யாத்திரையின் பெயரில் ஒன்றிணைக்கப்பட்டது. இதன் நிறைவு விழா கடந்த அக்டோபர் 31 ஆம் நாளில் சர்தார் வல்லபாய் பட்டேலின் 148 வது பிறந்தநாள் அன்று நிறைவேறியது.

பல நூற்றுக்கணக்கான சிற்றரசுகளாக சிதறி கிடந்த ஹிந்துஸ்தானத்தின் குறுநில மன்னர்களை அவர்களின் சமஸ்தானங்களை எல்லாம் பாரதப் பேரரசின் கீழ் பெரும் சமஸ்தானமாக இணைத்து இந்த பாரத தேசம் என்ற ஒற்றை குடையின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதில் சர்தார் வல்லபாய் பட்டேல் வழங்கிய பங்களிப்பும் அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியது. நாடு முழுவதும் சிதறி கிடந்த ஹிந்துஸ்தானத்தின் குறுநில மன்னர்களை ஒற்றுமையின் தேவையை வலியுறுத்தி கடந்த காலங்களை போல் அந்நிய ஆக்கிரமிப்பிற்கு நமது மண்ணும் மக்களும் ஆளாகி விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு பாரத சமஸ்தானத்தை பட்டேல் முன்மொழிந்தார். எண்ணற்ற இந்து மன்னர்கள் சீக்கிய மன்னர்கள் தாமாக முன்வந்து பாரத சமஸ்தானத்தில் இணைந்தார்கள். பலருக்கும் இந்த இணைப்பினால் தங்களின் நிலப்பிரதேசங்கள் மக்களின் வாழ்வாதாரம் பற்றிய அச்சங்கள் நிலவியது. அவை அனைத்தையும் உரிய விளக்கங்கள் சட்டபூர்வமான உத்தரவாதங்களுடன் படேல் தீர்த்து வைத்தார்.

இன்றைய பரந்த பாரத பேரரசு உருவானது. இதில் கிழக்கு மேற்கு பாகிஸ்தான்களுடன் இணைவோம் என்று அழிச்சாட்டியம் செய்த சுல்தான்கள் நவாப்ளின் படைகளை துவம்சம் செய்து அவர்களின் கொட்டத்தை அடக்கி வடக்கு தெற்கு பாகிஸ்தான்கள் உருவாகாமல் தடுத்து நிறுத்தியதில் படேலின் பங்கு அளப்பரியது. இன்று நாம் சுதந்திர பாரதத்தில் பாதுகாப்புடன் கௌரவத்துடனும் வாழ்வதற்கும் இது நம் தேசம் நம்முடைய தாய் பூமி என்ற பாதுகாப்பு உணர்வை நாம் அனுபவிப்பதில் உயிரை துச்சமாக நினைத்து பங்காற்றியவர் பாரதத்தின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் என்றால் அது மிகையல்ல . அந்த ஒற்றுமையின் அடையாளம் ஒருங்கிணைப்பின் பிம்பமாகத்தான் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு ஒற்றுமை சிலை என்ற பெயரில் முழு திருவுருவ சிலையாக இரும்பு மனிதருக்கு இரும்பு எஃகினால் ஆன வானாளாவிய சிலை அவரின் பூர்வ பூமியான குஜராத் மாநிலத்தில் எழுப்பப்பட்டது .

சர்தார் பட்டேல் ஒன்றிணைத்த பாரதம் பல மாநிலங்களாக மாவட்டங்களாக நிர்வாக அளவில் பிரிந்து இருந்தாலும் மொழி இனம் என்று வேறுபாடுகள் இருந்தாலும் அத்தனையும் கடந்து நம் பாரதியர்கள் என்று ஒன்று படுவது போல் நம் தேசத்தின் மண்ணும் ஒன்றுபட்டு அமிர்த கலச யாத்திரையாக நிறைவேறியது. சர்தார் வல்லபாய் பட்டேலின் 148வது பிறந்த நாளில் இந்த அமிர்த கலச யாத்திரையை நிறைவேற்றி அவர் அன்று முன்னெடுத்த பாரதத்தின் ஒருங்கிணைப்பை இன்று தேசம் மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்திருக்கிறது. இந்த யாத்திரைகளில் கொண்டுவரப்பட்டு அமிர்த கலசமாக குவிக்கப்பட்ட பாரத நாட்டின் திருமண மரியாதை உடன் வணங்கிய பிரதமர் மோடி அதிலிருந்து நெற்றிக்கு திலகம் வைத்து வணங்கி வழிபட்டார். பிறகு சர்தார் வல்லபாய் பட்டேல் அவரின் ஒற்றுமை சிலை அவரின் பிறந்த நாள் இந்த அமிர்த கலச யாத்திரை நிறைவுற்றதையும் என் மண் என் தேசம் என்ற அமிர்த கலச யாத்திரை நிறைவையும் பெருமிதத்தையும் நாட்டு மக்களுடன் பிரதமர் பகிர்ந்து கொண்டார் .

மேலும் 1930 களில் எப்படி தண்டியாத்திரை நாடு முழுவதும் இருந்த சாமானிய மக்களோடு மக்கள் நிகழ்வாக தேசம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டதோ? அதேபோலத்தான் அமிர்த கலச யாத்திரையும் நாடு முழுவதும் மக்களை முன்னிறுத்தி நடத்தப்பட்டதாக குறிப்பிட்டார். அந்நாளில் தண்டியாத்திரை எப்படி சாமானிய மக்களை தேசிய உணர்வோடு ஒன்றிணைத்ததோ? அதேபோல இந்நாளில் அமிர்த கலச யாத்திரை நாட்டு மக்களை தேசிய உணர்வோடு ஒன்றுபடுத்துவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். இந்த அமிர்த கலச யாத்திரை நிறைவு விழாவில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பிரதமர் மோடியின் தலைமையில் தேசம் அமிர்த கலச யாத்திரை அமிர்த உற்சவம் போல பெரும் சாதனைகளை முன்னெடுக்கிறது. இந்த சாதனைகள் வெற்றிப் பயணங்கள் மேலும் தொடரும் என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டார். பிரதமர் பேசுகையில் இந்த அமிர்த கலச யாத்திரைக்கான கௌரவ பீடம் போர் நினைவுச் சின்னத்திற்கு அருகில் அமிர்த வாடிகா என்ற பெயரில் கட்டமைக்கப்படும் என்று குறிப்பிட்டார். இந்த அமிர்த வாட்டிகா ஒரே பாரதம் பெரும் பாரதம் என்ற அடையாளமாக மிளிரும் என்று குறிப்பிட்டார்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் 150ஆவது ஆண்டு விழா வரவிருக்கிறது. அதற்கு முன்பாக தேசத்தில் உள்நாட்டு பாதுகாப்பு தேசியம் உள்ளிட்ட விவகாரங்களில் இருக்கும் பல்வேறு சிக்கல்களுக்கு அரசியல் தீர்வு காண மோடி அரசு முனைப்பு காட்டி வருகிறது. சமீபமாக காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் லட்சத்தீவுகளில் சிறப்பு அந்தஸ்து நீக்கம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு முடிவு கட்டியது ‌. தற்போது வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் சிக்கல்களுக்கு மத்திய அரசு அமைதிக்கான தீர்வை முன்னெடுக்கிறது. படேல் 150ஆவது ஜெயந்தி விழாவின் போது பாரதம் உள்நாட்டு அளவில் நலன் வளர்ச்சி பாதுகாப்பு தேசிய இறையாண்மை உள்ளிட்ட விவகாரங்களில் பெருமிதத்தோடு மிளிர வேண்டும் என்ற முனைப்போடு பிரதமர் மோடி அவரது அமைச்சரவை சகாக்கள் அரசை முன்னெடுத்து போவது கண்கூடாக தெரிகிறது.

சர்தார் வல்லபாய் பட்டேல் நினைத்திருந்தால் பிரிட்டிஷாரின் கைக்கூலியாகி பெரும் அதிகார மையத்தில் அமர்ந்திருக்கலாம். அவர் நினைத்திருந்தால் பிரிட்டிஷ் குடியுரிமையோடு குடும்பத்தோடு சுகபோகமாக லண்டனில் போய் வாழ்ந்திருக்கலாம். ஆனால் பிரிட்டிஷாரின் அடிமை ஆட்சியில் சீரழிந்து சின்னாபின்னமாக இருந்த தனது பாரத தேசத்தை மீட்டெடுப்பதில் மட்டுமே அவர் தனது முழு ஆயுளையும் அர்ப்பணித்தார். சுதந்திர பாரதத்தை எப்படி எல்லாம் குழப்பலாம்? எங்கெல்லாம் திட்டமிட்டு சூழ்ச்சிகளை அரங்கேற்றலாம் ? என்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏராளமான கைகள் வேலை செய்தது. அத்தனையும் தவிர்த்து பாரதம் முழுவதிலும் பரவி கிடந்த சிறு சிறு பிரதேசங்களை ஒன்றிணைத்து பெரும் பாரத சமஸ்தானத்தை கட்டமைத்ததில் அவரின் பங்களிப்பு அளப்பரியது. அன்று அவர் கட்டமைத்த பாரத தேசம் தான் இன்று வலுவான தேசிய கட்டமைப்பிற்கு அடித்தளமாக அமைந்தது. அதற்காக அவர் தேசத்தின் உள்துறை அமைச்சர் என்பதை கடந்து தனி மனிதராக எதிர்கொண்ட இன்னல்களும் இடர்பாடுகளும் ஏராளம். கடந்து வந்த உயிர் ஆபத்துக்கள் எண்ணற்றவை . அவரின் அவரின் குடும்பத்தாரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அனுபவித்த அச்சுறுத்தல்கள் எண்ணில் அடங்காதவை. ஆனால் அத்தனையும் கடந்து தன் வாழ்நாளில் ஒரு வலுவான பாதுகாப்பான பாரத தேசத்தை கட்டமைக்க வேண்டும் என்ற ஒரே இலக்கோடு அவரின் இறுதி மூச்சு வரை படேல் பங்களிப்பு வழங்கினார். பட்டேலின் தீர்க்கமான பார்வைகள் அதிரடியான நடவடிக்கைகள் அவர் மீது இருக்கும் நம்பிக்கை படேல் இருக்கும் துணிவு காரணமாகத்தான் இந்திய ராணுவமும் எண்ணற்ற தேசியவாதிகளும் எந்த எல்லைக்கும் போய் பட்டேலுக்கு பக்க பலமாக நின்றார்கள். அதன் காரணமாகத்தான் ஜுனாகத் மறங ஹைதராபாத் உள்ளிட்ட சமஸ்தானங்கள் பாரதத்தோடு இணைக்கப்பட்டது. அங்கிருந்த மக்களும் பாதுகாக்கப்பட்டார்கள்.

இன்று நாம் காணும் இந்த பாரத தேசமும் நாம் அனுபவிக்கும் தேச பாதுகாப்புக்கும் வலுவான அடித்தளமிட்டவர் சர்தார் வல்லபாய் பட்டேல். அவருக்கு அவரின் இரும்பு மனிதர் என்ற அடையாளத்திற்கு ஏற்ப இரும்பையும் எக்கையும் கலந்து சிலை அமைத்து தேசம் அவரை கௌரவித்திருக்கிறது. அவர் ஒருங்கிணைத்த பாரதம் இன்றளவும் ஒற்றுமையோடு இருக்கிறது என்பதன் அடையாளமாக இன்று பிரதமர் அமிர்த கலச யாத்திரையை நாடு முழுவதும் மண்ணெடுத்து என் மண் என் தேசம் என்ற பெயரில் நிறைவேற்றியது. அமிர்த வாட்டிகா என்ற பெயரில் அதற்கான கௌரவ பீடம் முன் மொழியப் படுகிறது. அதை பட்டேலின் பிறந்த நாளிலேயே நிறைவேற்றி அவர் புகழுக்கு மேலும் புகழஞ்சலி செலுத்தி இருக்கிறார். கூடிய விரைவில் அமிர்த கலச யாத்திரையில் அமிர்த வாடிகா கட்டுமானமும் திவ்யமாக நிறைவேறட்டும் . சர்தார் பட்டேல் தன் உயிரை பணயம் வைத்து ஒன்றிணைத்த அவரின் பாரத தேசம் அவரது 150வது பிறந்த நாளின் போது அவரின் மானசீக விருப்பங்கள் யாவும் நிறைவேறி அவரின் ஆன்மா ஆசியோடு அமிர்த வாட்டிகா என்ற பெயரில் உலகம் போற்றும் உன்னதமான அடையாளமாக நிலை பெறட்டும்.அதை இன்றைய ஆட்சியாளர்களும் தேசத்தின் மக்களும் ஆத்மார்த்தமாக அனைவரும் ஒருமித்த கருத்தோடு நிறைவேற்றி தர வேண்டும் . அதுவே தன் வாழ்நாள் முழுவதையும் இந்த தேசத்தின் நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த பட்டேல் என்றும் மாமனிதருக்கு இந்த தேசம் செய்யும் குறைந்தபட்ச கைமாறாக இருக்க முடியும்.


Share it if you like it