தமிழக மக்களால் பெருந்தலைவர் என்று பெரிதும் மதிக்கப்படும் கல்விக் கண் திறந்த காமராஜரை லூசுப்பயல் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். உயிரோடு இல்லாத பிரபலங்களின் புகழை திருடியோ அல்லது அவர்கள் தம்மை பாராட்டியதாகவோ கூறி, இவர் அளந்து விடும் கட்டுக்கதைகளும், பொய்களும் ஏராளம். இதற்கெல்லாம் ஆதாரம் கிடையாது என்பது அனைவரும் அறிந்த உண்மை. ‘இலங்கை சென்று பாடி விட்டு வரவா மகனே’ என்று பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இவரிடம் அனுமதி கேட்டதாக, அவர் இறந்தபோது சீமான் கூறியது காமெடியின் உச்சம்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடி வந்த நகைச்சுவை நடிகர் தவசியை நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவிக்காமல். அவர் மறைவிற்கு பிறகு ‘எனது அன்புக்குரிய மாமா தவசி’ என்று ட்விட்டரில் கதறியது, மறைந்த ஏ.ஆர்.ரகுமான் தாயார் பற்றி கதைவிட்டது என இவரது செயல்கள் அனைத்தும் அப்பட்டமானவை. ஆனால், அப்பாவி இளைஞர்கள் இவரின் பேச்சில் மயங்கி வருகின்றனர் என்பது கசப்பான உண்மை.
ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதையாக என்று கிராமப் புறங்களில் சொல்வதுண்டு. அதனை மெய்ப்பிக்கும் விதமாக சீமானின் பேச்சு அமைந்திருப்பதுதான் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வேதனையும் ஏற்படுத்தி இருக்கிறது. பொய் கதைகளை பேசி அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து தனது கட்சிக்கு இணைத்து வந்த சீமான், தற்போது தமிழக மக்களால் அதிகம் மதிக்கப்படும் கல்விக் கண் திறந்த காமராஜரை லூசுப்பயல் என்று விமர்சனம் செய்திருப்பதுதான் கடும் அதிர்ச்சி. இக்காணொளிதான் தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் லிங்க் இதோ…