பா.ஜ.க.விடம் சவால்: பின்வாங்கிய தி.மு.க. எம்.பி.!

பா.ஜ.க.விடம் சவால்: பின்வாங்கிய தி.மு.க. எம்.பி.!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்த கருத்திற்கு, தி.மு.க. எம்.பி செந்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் சவால் விடுத்து இருந்தார். இந்த நிலையில், திடீரென தனது சவாலை வாபஸ் பெற்று ஓட்டம் எடுத்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

தேர்தல் சமயத்தில் கொடுக்கப்படும் இலவச வாக்குறுதிகளுக்கு தடை விதிக்க வேண்டும். என, வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கினை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையில் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தன.

இதனிடையே, எதிர்மனுதாரராக தம்மை சேர்த்துக் கொள்ள வேண்டும் என தி.மு.க. ரிட் மனுவை தாக்கல் செய்து இருந்தது. இந்த வழக்கில், தி.மு.க. எம்.பி.யும் வழக்கறிஞருமான வில்சன் நீதிபதிகள் முன்பு ஆஜராகி இருந்தார். இதனை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து, பேசிய நீதிபதி, தி.மு.க. மட்டும்தான் புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்காதீர்கள். நீங்கள், பேசுவதையெல்லாம் பற்றி நாங்கள் எதுவும் சொல்லாததால், எங்களுக்குத் எதுவும் தெரியாது என்று நினைக்க வேண்டாம் நீதிபதி என்.வி.ரமணா காட்டமான முறையில் பேசி இருந்தார். இதனை தொடர்ந்து, நீதிபதியின் கருத்திற்கு, எதிராக தி.மு.க. எம்.பி. தனது கடும் எதிர்ப்பினை ட்விட்டரில் பதிவு செய்து இருந்தார்.

இதற்கு, தமிழ பா.ஜ.க. துணை தலைவர் நாராயணன் திருப்பதி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அவமதிப்பு செய்த தி.மு.க. எம்.பி.க்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார். மேலும், இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதற்குரிய இடத்தில், ட்விட்டர் வாயிலாக புகார் தெரிவித்து இருந்தார். இதற்கு, தி.மு.க. எம்.பி. செந்தில் ‘முடிஞ்சா தொட்டு பார் என்று சவால் விட்டு இருந்தார். இந்த நிலையில், திடீரென தனது சவாலை தி.மு.க. எம்.பி. வாபஸ் பெற்று இருக்கிறார். அதாவது, தனது ட்விட்டர் பதிவை இரவோடு இரவாக நீக்கி இருக்கிறார். இதுதான், தற்போது பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Image

Share it if you like it