தி.மு.க.விற்கு பா.ஜ.க. மூத்த தலைவர் சாட்டையடி கேள்வி!

தி.மு.க.விற்கு பா.ஜ.க. மூத்த தலைவர் சாட்டையடி கேள்வி!

Share it if you like it

ஹிந்தி மொழியை மத்திய அரசு திணித்து வருவதாக தி.மு.க. அவதூறு செய்தியினை பரப்பி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், பா.ஜ.க. மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி அக்கட்சிக்கு தரமான பதிலடியை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

நாராயணன் ட்விட்டர் பதிவு இதோ ;

ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்தியும், ஹிந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளிலும் மருத்துவ படிப்பை கற்பிக்குமாறு அலுவல் மொழி குழு பரிந்துரைத்துள்ளது என்று சொல்லப்படுகிறது. கடந்த இரு வருடங்களாக, தமிழகத்தில் மருத்துவ படிப்பில் ஆங்கில சொற்களுக்கு, தமிழில் பல

சொற்குவியல்களை டாக்டர். எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழகம் உருவாக்கி வைத்துள்ளது. துணை மருத்துவ படிப்புகளில் பல்வேறு பாடங்களை தமிழில் பயிற்றுவிக்க புத்தகங்களை உருவாக்கியுள்ளது. வரவேற்கிறோம். இது நாள் வரை, தன் மகன்கள்/ மகள்கள் டாக்டராக, ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பதால் தான்ஆங்கில வழி கல்விக்காக தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்தார்கள் தமிழக பெற்றோர்கள்.

தமிழ் கட்டாயம் என்றால் இனி கல்வி கொள்ளை தடுக்கப்படும். தான் வாங்கும் மருந்துகள் மருத்துவர் பரிந்துரைத்தது தானா என்பதை சோதித்து பெற்றுக்கொள்ளும் நிலையினை பல நூற்றாண்டுகளுக்கு பிறகு படித்து தெரிந்து கொள்ள போகிறான் தமிழன்.

இது நரேந்திரமோடி அவர்களின், பா.ஜ.க. அரசின் வெற்றியே!! சாதனையே!! ஆனால், இதை ஏன் கண்டிக்கிறது தி மு க? தமிழக மாணவர்கள் தமிழில் படிக்கக்கூடாதா? தான் உட்கொள்ளும் மாத்திரைகள் குறித்த புரிதலை தமிழர்கள் உணரக்கூடாதா? மருத்துவர்கள் பரிந்துரைத்ததை

தான் மருந்தகங்கள் விற்பனை செய்கின்றன என்பதை உறுதி செய்யக்கூடாதா? சோதித்து பார்க்கக்கூடாதா? ஏன்? கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறதா தி.மு.க. என்பதையே இந்த எதிர்ப்பு கேள்விக்குறியாக்குகிறது


Share it if you like it