நாட்டின் தலைமை பொறுப்பும் தேச அபிமானமும்

நாட்டின் தலைமை பொறுப்பும் தேச அபிமானமும்

Share it if you like it

நாட்டின் தலைமை பொறுப்பும் தேச அபிமானமும்

கமலா ஹாரிஸ் மற்றும் ரிஷி சுனக். இருவரும் அந்த நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்று இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து உலகளாவில் இவர்களைப் பற்றி வலதுசாரகளும் இடதுசாரிகளும் மற்றும் மத சார்பின்மை கொண்டவர்களும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஆகியிருக்கிறார். ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமராக இருக்கிறார். இரண்டு வல்லரசு நாடுகளிலும் இந்திய வம்சாவழியை சார்ந்தவர்கள். இவர்கள் பகவத் கீதை மீது சத்திய பிராமணனும் எடுத்ததால் இவர் இந்து வம்சாவழியும் சேர்ந்தவர்கள் ஆகிறார்கள்.

மதமும் ஜனநாயகமும்

உலக அளவில் ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது‌. ஒரு ஜனநாயக நாட்டில் பெருபான்மை மக்கள் எந்த சமுதாயத்தை சார்ந்தவர்களோ அந்த சமுதாயத்தை சார்ந்தவர்தான் அங்கு தலைமை பொறுப்புக்கு வருவார்கள். ஆனால் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமை பொறுப்புக்கு வந்து இருக்கிறார்கள்.‌ இதுபோன்று மற்ற நாடுகளிலும் நடக்க வாய்ப்பு இருக்கிறதா என்றும் கருத்துக்கள் பரவுகின்றன. இந்தியாவில் சற்று வெளிப்படையாகவே ஒரு இஸ்லாம் சமூகத்தை சேர்ந்தவர் இந்தியாவின் பிரதமர் ஆக முடியுமா என்றும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.‌ ஜனநாயகத்தில் அனைத்தும் சாத்தியமே ஆனாலும் ஜனநாயகம் என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடும் உதாரணத்திற்கு அமெரிக்காவில் இருக்கும் ஜனநாயகத்திற்கும். பிரிட்டனில் இருக்கும் ஜனநாயகத்திற்கும். இந்தியாவில் இருக்கும் ஜனநாயக முறைக்கும் வித்தியாசம் உள்ளது.

அமெரிக்க ஜனநாயகம்

ஒரு நாட்டி ஜனநாயக முறையை அறிந்து கொள்வதற்கு முன்பாக அந்த நாட்டின் மக்களின் பொதுவான குணங்களை பற்றி அறிந்து கொள்வது முக்கியம். அமெரிக்கா உலகின் மிகவும் இளமையான நாடு அதே நேரத்தில் உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாடு அமெரிக்காதான். இந்த தேசம் இயற்கையான ஒரு பாரம்பரிய வரலாறு கொண்டது அல்ல. பல உலக நாடுகளிலும் இருந்து மக்கள் கூட்டமாக இங்கு வசித்து அதன் பிறகு உருவான தேசம்.‌ இப்போது இருக்கும் குடிமகன்கள் அந்த நாட்டில் வெறும் 10வது தலைமுறையாக தான் இருப்பார்கள். இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் பெருவாரியான குணாதிசயம் என்ன‌ வென்றால். மனிதன் வாழ்வது வாரத்தின் இறுதி நாட்களுக்காதான் ( man living for weekend ). அமெரிக்கர்கள் தங்களின் சொந்த வாழ்வாதாரத்திற்கு பிரச்சினை வந்தால் மட்டுமே எதிர்வினை ஆற்றுவார்கள். மற்றபடி அவர்களுக்கு தேர்தல் ஜனநாயகம் என்பது இதற்கு அடுத்துதான்.

கமலா ஹாரிஸ் பதவிக்கு வருவதற்கு முன்பாகவே பரக் ஓபமா அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தார் இதுவே அந்த நாட்டின் ஜனநாயகத்திற்கு ஒரு நல்ல உதாரணம். அமெரிக்க மக்கள் தொகையில் வெறும் 2 சதவீதம் இந்துக்கள். 1 சதவீதம் வாக்காளர்கள். அப்படி இருந்தும் அமெரிக்க மக்கள் கமலா ஹாரிசை தேர்ந்தெடுத்து இருப்பது. இந்து சமுதாயத்தின் மீது அமெரிக்க மக்களுக்கு இருந்த நேர்மறையான நேர்மறையான எண்ணத்தையே வெளிக்காட்டுகிறது.

இங்கிலாந்தின் ஜனநாயகம்

பொதுவாக மேற்கத்திய மக்களுக்கு மத நம்பிக்கையை விட. பொருளாதார ரீதியாக தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வது தான் முக்கியம். இங்கிலாந்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில். 49/ மக்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள். 17/ ஆங்கிலிகேன் கிறிஸ்தவர்கள் ( Anglican Christian ). 17/ ஆங்கிலிகேன் அல்லாத கிறிஸ்தவர்கள். 8/ ரோமன் கேத்தலிக் 5/ இஸ்லாமியர்கள். 1.5/ இந்துக்கள். 2.5/ மற்ற மதத்தினர்.

மேற்கண்ட புள்ளி விவரப்படி இஸ்லாமியர்களை விட இந்துக்கள் குறைவாகவே இருக்கிறார்கள் இருந்தாலும் அங்கு இந்திய வம்சா வழியை சேர்ந்தவர் ஒருவர் பிரதமராக முடியும் என்றால். இங்கிலாந்து மக்களும் இந்து சமுதாயத்தை சேர்ந்தவர்களும் அந்த நாட்டில் ஒருவருடன் ஒருவர் இணைந்து வாழ்கிறார்கள் என்பதற்கான உதாரணம்.

இந்தியாவில் ஜனநாயகம்

துர்கா தாஸ் பாசு சொன்னது போல். _நமது நாடு அரசியல் முறையான ஜனநாயகத்தை வெற்றிகரமாக கடைப்பிடித்து வருகிறது. ஆனால் உண்மையில் நமக்குத் தேவை சமூக ரீதியான ஜனநாயகமே ( our nation successfully adopted democracy form of government. but which is really need democracy form of society ).

நமது நாட்டில் தேர்தல் முறையில் ஜாதி மத மொழி இன அரசியல் இருக்கவே செய்கிறது ஆனாலும் அதையும் தாண்டி உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக நாட்காவும். வெற்றிகரமாக மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.

இந்தியாவில் ஒரு முஸ்லிம் பிரதமர் ஆக முடியுமா என்ற கேள்வி இப்போது ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. தற்போது மிக முக்கிய அரசியல்வாதிகளும் இதைப் பற்றி பேசுகிறார்கள். காரணம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் தலைமைப் பதவியை இந்து வம்சாவழியை சார்ந்தவர்கள் வகிப்பதால் இந்த கேள்வி இப்போது அதிகமாகின்றது.

இதற்கு இந்தியாவில் மத ரீதியான மக்கள் தொகை புள்ளிவிவரங்களை பார்க்கலாம்.

இந்து – 79.80%
இசுலாம் – 14.23%
கிறித்துவம் – 2.30%
சீக்கியம் – 1.72%
பௌத்தம் – 0.70%
சமணம் – 0.37%
சரத்துஸ்திர சமயம் – 0.06%
பிற சமயங்கள் / சமயமின்மை – 0.9%

இந்தியாவில் இஸ்லாமியர்கள் பிரதமர் பதிவை தவிர்த்து மற்ற அனைத்து முக்கிய பதவிகளிலும் இருந்திருக்கிறார்கள்.

அதே நேரத்தில் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக இருக்கிறார்கள் என்றால் அதுவும் இல்லை. 1. 72 / மக்கள் தொகை சதவீதம் உள்ள சீக்கிய வம்சத்தை சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆகியிருக்கிறார்.

இன்னொரு முக்கிய தகவலையும் நாம் காணலாம். இந்திய ராணுவத்தில் சீக்கியர்கள் 8/ சதவீதம் இருக்கிறார்கள்.‌இந்திய மக்கள் தொகை 14.5% உள்ள இஸ்லாமியர்கள் ராணுவத்தில் வெறும் 1.5% மட்டுமே இருக்கிறார்கள். ராணுவத்தில் பணியாற்றுவது என்பது தேசப்பற்றின் ஒரு அடையாளமாகும்.

மற்றொரு சிறுபான்மை மதம்மான கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள். கோவா, கேரளா, பஞ்சாப், ஆந்திரா, போன்ற மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராகவும் இருந்திருக்கிறார்கள்.

இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் ஜம்மு காஷ்மீர் தவிர்த்து மற்ற எந்த மாநிலத்திலும் முதல்வர் பதவியை வகித்தது இல்லை. உதாரணத்திற்கு கேரளாவில் 26% மேற்கு வங்கத்தில் 27% மக்கள்தொகை இஸ்லாமியர்கள் ஆனால். அங்கு ஒரு இஸ்லாம் சமூகத்தை சேர்ந்த முதல்வரை நாம் இன்னும் மனதளவிலும் கூட நினைத்து பார்க்க முடியவில்லை. அதே நேரத்தில் 18 சதவீதம் கேரளாவில் கிறிஸ்தவர்கள் அங்கு ஒருவர் முதல்வராக இருந்து இருக்கிறார். ஏ கே அந்தோணி. பஞ்சாபில் 2% மக்கள் தொகை கொண்ட கிறிஸ்துவரான சரண் ஜித் சன்னி முதல்வராக இருந்து இருக்கிறார். இதெல்லாம் சமய சார்பின்மைக்கு நம் நாட்டில் நடந்த உதாரணங்கள் இதுபோன்று இன்னும் உதாரண சம்பவங்கள் நிகழும்.

ஜனநாயக நாட்டில் தலைமை பொறுப்புக்கு வருவதற்கு.‌ தான் சார்ந்த சமுதாயத்தின் அளவைவிட. மக்களின் மனதில் இடம் பிடித்து தேச அபிமானத்துடன் ( தேசம் – நாடு அபிபானம் – பற்று). நாட்டுப்பற்றுடன் நடந்து கொள்வதே முக்கியம்.


Share it if you like it