நாட்டு நாட்டு பாடல்: நடனமாடி மகிழ்ந்த ஜி20 குழு!

நாட்டு நாட்டு பாடல்: நடனமாடி மகிழ்ந்த ஜி20 குழு!

Share it if you like it

ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஜி20 மாநாட்டு குழுவினர் நடனமாடி மகிழ்ந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் கடந்தாண்டு மார்ச் மாதம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் வெளியானது. நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான இத்திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல், கோல்டன் குளோப் விருதை வென்றிருந்த நிலையில், தொடர்ந்து ஆஸ்கார் விருதையும் வென்றது. இதையடுத்து, இப்பாடல் உலகளவில் டிரெண்டாகி, பல்வேறு நாட்டினரையும் ஆட்டம் போட வைத்திருக்கிறது.

இந்த சூழலில், இந்தியாவின் தலைமையில் ஜி-20 மாநாடு பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில், வேளாண் பணிக் குழுவின் 2-வது வேளாண் குழுவினர் கலந்துகொண்ட கூட்டம் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் வெளிநாட்டு குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, உள்ளூர் நடனக் கலைஞர்கள் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம்டினர். இதைக்கண்ட வெளிநாட்டு குழுவினரும் ஆர்வத்தில் பாடலுக்கு நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it