கடந்த இரண்டு நாட்களாக நடத்திய செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கான ஆய்வுக்கூட்டங்களின் வெளிப்பாடாக இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறேன்.குடியிருப்போர் நலச்சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று, 10 வீடுகள் அல்லது அதற்குக் குறைவாகவும், 3 மாடிகள் அல்லது அதற்குக் குறைவாகவும் உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு, பொதுப் பயன்பாட்டிற்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டிற்கு 5 ரூபாய் 50 பைசாவாகக் குறைத்திருக்கிறோம்.
சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாகப் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நாவலூர் சுங்கச்சாவடியில் நாளை முதல் கட்டணம் வசூலிப்பது நிறுத்திவைக்கப்படுகிறது.
இதுபோன்ற ஆய்வுகள்தான் அரசுக்கும் மக்களுக்குமான தொடர்பை வலுப்படுத்தும். இதனை அமைச்சர்களும் – அதிகாரிகளும் தொடர வேண்டும். இவ்வாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.