பாகிஸ்தானில் இருக்கும் அணுகுண்டுகள் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் பொதுவானது

பாகிஸ்தானில் இருக்கும் அணுகுண்டுகள் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் பொதுவானது

Share it if you like it

பாகிஸ்தானில் இருக்கும் அணு ஆயுதங்கள் பாகிஸ்தானிற்கு மட்டும் சொந்தமானது இல்லை. அது உலகில் இருக்கும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் பொதுவானது என்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மருமகன் முகமது சப்தார் பேசியிருக்கிறார். இது உலகம் முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. இந்த நிமிடம் வரை எந்த ஒரு அரபு நாடும் முகம்மது சப்தாரின் இந்த அறிக்கையை கண்டிக்கவும் எதிர்க்கவோ இல்லை என்பது மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கிறது. பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் மேலும் மேலும் தாக்குதலை தொடரும் பட்சத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு எதிராக பாகிஸ்தான் தன்னிடம் இருக்கும் அணுகுண்டுகளை பயன்படுத்த வேண்டும் அல்லது இஸ்ரேலுக்கு எதிராக பாகிஸ்தானின் அணுகுண்டுகளை பயன்படுத்தும் எந்த ஒரு நாட்டிற்கும் பாகிஸ்தான் முழு அனுமதியும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என்பதை இதன் மூலம் முஹம்மது சப்தார் சூசகமாக தெரிவித்திருக்கிறார்.

இஸ்ரேல் தன்னிடம் ஏராளமான அணு ஆயுதங்கள் நவீன பாதுகாப்பு உபகரணங்கள் வைத்திருந்தாலும் இஸ்ரேல் தனக்கு நிகராக அண்டை நாடுகள் எதுவும் ஆயுதங்களும் தொழில்நுட்பமோ பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதை தீவிர கவனம் செலுத்தி வந்தது. இன்று வரை துருக்கி ஈரான் உள்ளிட்ட எந்த ஒரு நாடும் அணு ஆயுதத் தொழில்நுட்பத்தின் ஒரு இலக்கை எட்ட முடியாதபடி தொடர்ந்து முடக்கி வருவது இஸ்ரேலின் வலுவான தற்காப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகவே இருந்து வருகிறது. மேலும் பாலஸ்தீனம் சவுதி லெபனான் உள்ளிட்ட எந்த ஒரு அண்டை நாட்டிடமும் இன்று வரை அணு ஆயுதம் இல்லாமல் இருப்பதும் அதன் காரணமாக ஒரு அடி எடுத்து வைத்தாலும் அது பல அடிகள் முடக்கப்படும் வகையில் இஸ்ரேல் பலத்த எதிர் நடவடிக்கைகளை எடுப்பதும் தான் முக்கிய காரணம் . அதனால் தான் சவுதி ஏமன் ஓமன் பஹ்ரைன் கத்தார் என்று எண்ணெய் வளம் கொழிக்கும் பெரும் செல்வந்த நாடுகளில் கூட இன்று வரை அணு ஆயுதமோ அது சார்ந்த தொழில்நுட்பம் பற்றிய பேச்சு எழுவதே இல்லை

இஸ்லாமிய நாடுகளில் அணுகுண்டு வைத்திருக்கும் ஒரே நாடு பாகிஸ்தான் மட்டுமே . அதுவும் பாகிஸ்தானின் சொந்த அறிவியல் தொழில்நுட்பத்திலோ அதன் சொந்த அறிவியல் ஆராய்ச்சியின் வழியாக கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பம் கொடுத்ததோ கிடையாது . கடந்த காலங்களில் பாகிஸ்தானின் விஞ்ஞானி ஒருவர் மேற்குலக நாடுகளில் இருந்து அவர்களின் ஆசியோடு கடத்தி வந்த அணு ஆயுத தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர் உருவாக்கிய அணுகுண்டுகள் பாகிஸ்தானிடம் உண்டு. அதிலும் அவர் கொண்டு வந்திருந்த உயர் தொழில்நுட்பத்தை இலகுவாக சீனா தன் வசமாக்கி கொண்டது. பதிலாக சீனாவிடம் இருக்கும் அணு ஆயுத தொழில்நுட்பத்தையும் அதன் வழியில் கட்டமைத்த அணு ஆயுதங்கள் சிலவற்றையும் பாகிஸ்தானிற்கு அன்பு பரிசாக கொடுத்திருக்கிறது. அவை தான் இன்றளவும் பாகிஸ்தானின் வசம் இருக்கும் அணுகுண்டுகள். அந்த வகையில் சீனாவின் தயாரிப்புகள் எப்படி இருக்கும்? என்று உலகம் அறியும். அதனால் பாகிஸ்தான் வசம் இருக்கும் அணுகுண்டுகள் பற்றி அரபு நாடுகளோ மேற்குலகமோ கவலை கொள்ளாது. தான்.

ஆனால் அணுகுண்டு தயாரிப்பதற்கு என்று நவீன நவீன கட்டமைப்புக்கள் ஆய்வுகள் தான் அவசியம் என்ற கட்டாயம் இல்லை. செறிவூட்டப்பட்ட யுரேனியமும் கொஞ்சம் அணு தொழில் நுட்பமும் கிடைத்தால் போதும். படித்த அறிவுள்ளவர்கள் அதை விபரீதமாக பரீட்சிக்கும் பட்சத்தில் அரசுக்கும் தெரியாமலே கூட அணுகுண்டுகளை உற்பத்தி செய்ய முடியும்.

இதனால் தான் செறிவூட்டப்பட்ட யுரேனியம் பாகிஸ்தானிற்கு கிடைக்கக்கூடாது என்பது என்பதில் அப்துல் கலாமும் வாஜ்பாயுன் மிகவும் கவனமாக இருந்தார்கள். காரணம் பாகிஸ்தானில் அணுகுண்டு ராணுவ வசம் மட்டும்தான் இருக்கும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. அது பாகிஸ்தானின் ராணுவம் ஐஎஸ்ஐ யின் மூலம் பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் எளிதாக கிடைக்கக்கூடும். அதன் மூலம் காஷ்மீர் மற்றும் இதர மாநிலங்களை மையப்படுத்தி பாரதத்தில் நடக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதங்களுக்கும் பாகிஸ்தானின் மூலம் இந்த அணு ஆயுதங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதன் மூலம் பாரதத்தின் உள்ளும் புறமும் வரக்கூடிய பேரழிவு அபாயங்கள் அதிகம் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்து இருந்தார்கள். அதனால் தான் கூடுமானவரையில் பாகிஸ்தானின் கைகளுக்கு அணு ஆயுதம் கிடைக்கப்பெறாமல் செய்வதற்கு அவர்களால் ஆன அத்தனையும் செய்தார்கள். ஆனால் அமெரிக்கா ரஷ்யா ஐரோப்பா பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் எல்லாமே இந்தியாவிடம் அணு ஆயுதம் இருக்கும்போது பாகிஸ்தானிடம் இருந்தால் என்ன? என்று ராணுவ சமநிலையை பற்றி பாடம் எடுத்தது.

பாரதம் பாகிஸ்தான் சீனா என்று அண்டை நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவும் தனது வலிமையை பறைசாற்றவும் மட்டுமே அணுகுண்டை தயாரித்து வைத்திருக்கிறது. இதுவரையில் எந்த ஒரு நாட்டையும் அணுகுண்டை காட்டி அச்சுறுத்தியதோ மிரட்டியதோ கிடையாது. ஆனால் தன்னிடம் அணுகுண்டு வந்த அடுத்த நிமிடம் பாகிஸ்தான் அதை வைத்து பாரதத்தை மிரட்டத் தொடங்கியது. குறிப்பாக தாங்கள் முன்னெடுக்கும் பயங்கரவாத நடவடிக்கைகள் காஷ்மீரை முன்னிறுத்தி செய்யும் எல்லைப்புற சிக்கல்களை எதிர்க்கும் வகையான பெரிய அளவில் பாரதத்திடமிருந்து ஏதேனும் பதிலடி கிடைத்தால் அதன் மூலம் பாகிஸ்தானின் ராணுவத்திற்கோ ஆயுத கிடங்கிக்கோ பெரிய அளவில் இழப்பு வருமானால் நிச்சயம் நாங்கள் பாரதத்திற்கு எதிராக அணுகுண்டை பயன்படுத்துவோம் என்று வெளிப்படையாக அவர்கள் பாரதத்தை மிரட்டியவர்கள். இதை காரணம் காட்டியே கடந்த கால ஆட்சியாளர்கள் பாகிஸ்தானிடம் பணிந்து போனார்கள். இந்திய ராணுவத்தையும் கட்டி வைத்தார்கள்.

ஆனால் இவ்வளவும் தூரம் பொறுமை காத்த பிறகும் இன்று பாகிஸ்தானில் இருக்கும் அணுகுண்டுகள் பொறுப்பற்றவர்களின் கைகளில் பாதுகாப்பற்ற நிலையில் தான் இருக்கிறது என்பதை அவர்களின் வாயாலேயே காலம் ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறது. அதன் வெளிப்பாடு தான் வெளிப்பாடு தான் தேசத்தின் பிரதமர் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு அமைச்சர் ராணுவம் உளவுத்துறை என்று முக்கிய பொறுப்பு பதவியில் எதிலும் இல்லாத ஒரு முன்னாள் பிரதமரின் மகன் மருமகன் என்ற அடையாளம் மட்டுமே இருக்கும் ஒருவர் பாகிஸ்தானின் வசம் இருக்கும் அணுகுண்டுகள் பற்றி ஊடகங்கள் மத்தியில் பேசி இருக்கிறார். அதிலும் அந்த அணுகுண்டுகள் பாகிஸ்தானுக்கு மட்டும் உரிமையானவை இல்லை உலகில் இருக்கும் ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் பொதுவானது என்று பொதுவுடமை சித்தாந்தத்தையும் முன்னிறுத்தி பேசியிருக்கிறார். இதை வேறு எந்த ஒரு நாட்டிலும் இப்படி பேசி இருந்தால் இந்நேரம் அந்த அரசுகள் அவரை மீது கடும் நடவடிக்கைகளை எடுத்திருக்கும் . தேச பாதுகாப்பு தேசிய இறையாண்மை உள்ளிட்ட விவகாரங்களில் அத்துமீறியதாக மீறியதாக நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து வழக்கு பதிந்திருக்கும் . ஆனால் பாகிஸ்தானில் இது எதுவும் சாத்தியம் இல்லை என்பதால் கூடிய விரைவில் அவர் அரசியல் அரங்கில் நவாஸ் ங கட்சியின் அடுத்த முகமாக பாகிஸ்தானின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவகப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அதுதான் பாகிஸ்தான். அதுதான் பாகிஸ்தானின் உண்மை வரலாறு.

ஆனால் இதே இஸ்ரேல் கடந்த காலங்களில் பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் கிடைக்கக்கூடாது கிடைக்கும் பட்சத்தில் அது அருகில் இருக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கு ஒரு பலமாக கூடும். பாகிஸ்தானின் மூலம் இதர இஸ்லாமிய நாடுகளுக்கும் அந்த தொழில்நுட்பம் கிடைக்கும் பட்சத்தில் அல்லது பாகிஸ்தானில் இருந்து அவை மத பாசத்தோடு கடத்தப்படும் பட்சத்தில் இஸ்லாமிய நாடுகள் முழுமையாக அணு ஆயுத தேசங்களாக மாறும். அது ஒட்டுமொத்த உலகிற்கும் அபாயமாக மாறும் என்று அமெரிக்காவிடம் எச்சரித்தது . ஆனால் பாகிஸ்தான் தன்னை மீறி எதுவும் செய்து விடாது என்று கண்மூடித்தனமாக நம்பிக்கையில் அமெரிக்கா பாகிஸ்தானை வளர்த்து விட்டது. இன்று அதன் பலனை அமெரிக்கா பிரிட்டன் ஐரோப்பா உள்ளிட்ட மேற்குலகநாடுகள் அறுவடை செய்ய தயாராகிறது. காரணம் எந்த பாகிஸ்தானுக்கு இந்தியாவை மட்டம் தட்டி வைக்க வேண்டும் என்ற காரணமாக அவர்கள் அணு தொழில்நுட்பங்கள் எல்லாம் கிடைக்கச் செய்தார்களோ? இன்று அதே அணு தொழில்நுட்பத்தை வைத்து அமெரிக்காவின் செல்ல பிள்ளையான இஸ்ரேலையே தகர்க்க பாகிஸ்தான் தயாராகிறது. இதுதான் விதைத்த வினையும் விதையும் ஒரு நாள் விளைந்தே தீரும். அதை அறுவடை செய்து ஆக வேண்டும் என்னும் தர்மத்தின் நியதி. இதை இனியேனும் பாரதத்தை வீழ்த்த நினைக்கும் சக்திகள் உணரட்டும்.


Share it if you like it