பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஆகஸ்ட் 5, 2019 அன்று, இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீரின் தற்காலிக சிறப்பு அந்தஸ்து அல்லது சுயாட்சியை ரத்து செய்வதற்கான தீர்மானத்திற்கு இந்திய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
இதனால் எப்போதும் கலவர பூமியாகவே காணப்பட்ட ஜம்மு காஷ்மீர் அமைதி பூங்காவாக மாறியது. இந்நிலையில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, காஷ்மீர் மாநிலம் குபவாரா மாவட்டத்தில் உள்ள தீட்வாலில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சாரதா கோயிலில் அக்டோபர் 15ஆம் தேதி நவராத்திரி பூஜை நடைபெற்றது.
இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று காஷ்மீர் மாநிலம் தீட்வாலில் உள்ள சாரதா கோவிலில் நடைபெறும் நவராத்திரி பூஜை பள்ளத்தாக்கில் இழந்த நமது கலாச்சாரத்தை மீட்டெடுப்பதை குறிக்கிறது.இந்த நவராத்திரியின்போது துர்க்கை அம்மா அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும் என்று சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
https://x.com/annamalai_k/status/1714310195655119274?s=20