திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும். மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடித்தததை அடுத்து. கம்யூனிஸ்ட், பாஜக, கட்சியை சேர்ந்த தொண்டர்கள், தலைவர்கள், மற்றும் அப்பாவி மக்கள். படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு கண்டனமோ, எதிர்ப்போ, தெரிவிக்காமல். தமிழக ஊடகங்கள், தி.மு.க, தி.க, வி.சி.க, உட்பட தமிழக கட்சிகள் வழக்கம் போல அதே மெளனத்தை இன்று வரை கடைப்பிடித்து வருவது என்பது கசப்பான உண்மை.
இதனை தொடர்ந்து தேசிய பெண்கள் ஆணையத்தின் (National Commission for Women ) தலைவர் ரேகா சர்மா தனது எண்ணத்தை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.
கற்பழிப்பு, அச்சுறுத்தல் காரணமாகவும். காவல்துறையின் செயலற்ற தன்மையால். மேற்கு வங்கத்தில் நிகழ்ந்து வரும் வன்முறையிலிருந்து தப்பிக்க பெண்கள் விரும்புகின்றனர். காவல்துறை மற்றும் மாநில அதிகாரிகள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். மேற்கு வங்கத்தில் பல பெண்கள் பலாத்கார அச்சுறுத்தல் காரணத்தினால். மாநிலத்தை விட்டே வெளியேற விரும்புகின்றனர்.
இது காவல்துறையின் செயலற்ற தன்மை மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அவர்கள் தோல்வி அடைந்து விட்டனர். பெண்கள் காவல்துறையில் புகார் அளித்தால் தங்களுக்கு ஏதேனும் பின்விளைவுகள் ஏற்படக்கூடும் என்று அஞ்சுகிறார்கள். “வன்முறையால் வீடுகளை விட்டு வெளியேறிய. பலரைப் பற்றிய தகவல்கள் எங்கள் குழுவிற்கு கிடைத்து உள்ளது. தற்போது அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தாங்கள் தாக்கப்பட்டதாகவும், அவர்களது வீடுகள் அழிக்கப்பட்டதாகவும், திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் தங்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டு உள்ளனர். ஒவ்வொரு நாளும் கற்பழிப்பு மற்றும் அச்சுறுத்தல் குறித்த புகார்கள். எங்கள் குழுவிற்கு கிடைத்த வண்ணம் உள்ளது. காவல்துறை மற்றும் மாநில அதிகாரிகள் தங்களுக்கு எந்தவிதமான உரிய பாதுகாப்பையும் வழங்கப்படவில்லை என்று பெண்கள் வேதனையுடன் தெரிவித்தனர் என்று ரேகா சர்மா கூறியுள்ளார்.
நன்றி ஓப் இந்தியா