நீட் ராஜன் குழு அமைக்க அனுமதி பெறப்பட்டதா..? உயர்நீதி மன்றம் கேள்வி…

நீட் ராஜன் குழு அமைக்க அனுமதி பெறப்பட்டதா..? உயர்நீதி மன்றம் கேள்வி…

Share it if you like it

ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தது திமுக ஆனால் கூறியபடி தேர்வை ரத்து செய்யாமல் அதன் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தனர். குழு அமைக்கும் நடவடிக்கை விதிகளுக்கு புறம்பானது என தமிழக பா.ஜ., பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதி மன்றத்தில் வந்தது.

அப்போது நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது என அறிவுறுத்தினர். மேலும், குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பினர். உடனே தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் அவகாசம் வேண்டுமெனக் கோரினார். இதனால் வழக்கை ஜூலை 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Share it if you like it