Share it if you like it
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் இன்று காலை 7.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். மேலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்த வீரர் வீராங்கனைகளை சுதந்திர தின விழாவில் பங்கேற்குமாறு பாரதப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருந்தார்.
டெல்லி அசோகா ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த இந்திய வீரர்கள் செங்கோட்டைக்கு புறப்பட்டனர். ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இவ்வாறு பேசியுள்ளார்.
“ சுதந்திர தின விழாவில் கொடி ஏற்றும் நிகழ்வை முன்பு நாங்கள் டிவியில் பார்ப்போம். இப்போது நாங்கள் தனிப்பட்ட முறையில் நேரில் செல்கிறோம். இது ஒரு புதிய அனுபவம். தனிப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் நாம் இவ்வளவு காலம் தங்கப்பதக்கம் வென்றதில்லை. என்னால் நாடு பெருமைப்படுவதை நான் நன்றாக உணர்தேன்.” என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி ; நீயூஸ் 18
சுதந்திரம் பெற்று தந்த அனைத்து தெய்வங்களை வணங்குவோம்
அனைவருக்கும் 75 ஆம் ஆண்டு சுகந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள் 🇮🇳🔥🙏 pic.twitter.com/hXQ61x1IIy
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) August 15, 2021
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1426745020049096705
Share it if you like it