ஆற்காடு வீராசாமி சொன்னதை சுட்டிக்காட்டி, தி.மு.க.வின் நீட் தேர்வு நாடகத்தை தோலுரித்துக் காட்டி இருக்கிறார் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையில், பி.டி.எஸ். கலந்தாய்வை மத்திய அரசு நடத்தப்போவதாக அறிவித்திருப்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, நீட் தேர்வு வருவதற்கு முன்பு மாணவர் சேர்க்கையில், தமிழ்நாட்டில் ஏராளமான முறைகேடுகள் நடந்தன. தி.மு.க. அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீரசாமி, இதை ஒரு பேட்டியில் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.
மேலும், வசதி படைத்தவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பை படிக்கும் நிலை இருந்தது. ஆகவே, மருத்துவத்துறையில் நடக்கும் ஊழலை குறைக்கவும், ஏழை மாணவர்களும் மருத்துவம் பயில வேண்டும் என்கிற அடிப்படையிலும்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. மருத்துவக் கவுன்சில் குறித்து பேசுவதற்கு தி.மு.க. அரசுக்கு அருகதை கிடையாது என்று ஆவேசமாகக் கூறியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல, மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆற்காடு வீராசாமி பேசியதையும் நெட்டிசன்களும், பா.ஜ.க.வினரும் வைரலாக்கி வருகின்றனர்.