தி.மு.க. அண்கோ கம்பெனியின் குட்டு உடைந்தது… இந்தியாவில் மட்டுமல்ல உக்ரைனிலும் ‘நீட்’ தேவை!

தி.மு.க. அண்கோ கம்பெனியின் குட்டு உடைந்தது… இந்தியாவில் மட்டுமல்ல உக்ரைனிலும் ‘நீட்’ தேவை!

Share it if you like it

இந்தியாவில் மட்டுமல்ல உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் மருத்துவம் படிக்க வேண்டுமானால், இந்தியாவில் நடைபெறும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். மேலும், இறுதியாண்டு முடித்தவுடன் நடைபெறும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற தகவலை அம்பலப்படுத்தி, தி.மு.க. அண்கோ கம்பெனியின் குட்டை உடைத்திருக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இந்தியாவை பொறுத்தவரை, எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை படிக்க வேண்டுமானால் நீட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்கிற விதிமுறை இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. நீட் தேர்வு பயத்தாலும், நீட் தேர்வில் தோல்வியடைந்ததாலும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதாக தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கூக்குரல் எழுப்பி வருகின்றன. ஆகவே, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.

மேலும், நீட் தேர்வால்தான் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கின்றனர். இதன் காரணமாகவே, வெளிநாடுகளில் அசம்பாவிதங்கள் நிகழும்போது மாணவர்கள் சிக்கிக் கொண்டு உயிரிழக்கிறார்கள். ஆகவே, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூப்பாடு போட்டு வருகின்றனர். தற்போது, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கும் நிலையில், ஏராளமான தமிழக மாணவர்கள் அங்கு சிக்கித் தவிக்கிறார்கள். ஆகவே, தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் நீட் தேர்வு ரத்து கோஷம் ஓங்கி ஒலிக்கிறது.

ஆனால், உண்மையில் நடப்பது என்ன? நீட் தேர்வு நடைமுறைக்கு வருவதற்கு முன்பைவிட, தற்போதுதான் அதிகமான தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்து வருகிறார்கள். உதாரணமாக, நிகழாண்டு மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக மாணவர்கள் 2,143 பேர் சேர்ந்திருக்கிறார்கள். அதேசமயம், நீட் தேர்வு வருவதற்கு முன்புவரை சில நூறு மாணவர்களே சேர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது. காரணம், மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தாலும், தமிழகத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க சுமார் 1 கோடி ரூபாய் வரை செலவாகும். அந்தளவுக்கு கொள்ளையடிக்கின்றனர் தனியார் மருத்துவக் கல்லூரி மாஃபியாக்கள்.

ஆகவேதான், மருத்துவம் படிக்க வெளிநாடுகளை தேர்ந்தெடுத்தனர் மாணவர்கள். அந்த வகையில், ரஷ்யா, சீனா, உக்ரைன், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தமிழக மாணவர்கள் மருத்துவம் படித்து வருகிறார்கள். இதில், ரஷ்யா மற்றும் உக்ரைனில் படிக்கும் மாணவர்கள்தான் அதிகம். காரணம், இங்குதான் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் குறைவு. எனினும், இங்கும் மருத்துவம் படிக்க வேண்டுமானால் இந்தியாவில் நடைபெறும் நீட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், இறுதியாண்டு படிப்பை முடிந்த பிறகு ஒரு தகுதித் தேர்வும் நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே டாக்டர் என்ற அங்கீகாரத்தோடு இங்கு வரமுடியும்.

ஆனால், இந்த உண்மையை மறைத்து, வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க தகுதித் தேர்வுகள் எதுவும் இல்லாததுபோலவும், இதன் காரணமாகவே மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது போலவும், இதுபோன்ற போர்களின்போது சிக்கித் தவிப்பது போலவும் சித்தரித்து நீலிக்கண்ணீர் வடிக்கின்றன தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளும். இதையடுத்து, எல்லா நாடுகளிலும் தகுதித் தேர்வு உண்டு என்று அம்பலப்படுத்தி தி.மு.க. அண்கோ கம்பெனியின் குட்டை உடைத்திருக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு நிர்ணயித்திருக்கும் மருத்துவக் கட்டணத்தை தமிழ்நாட்டில் இதுவரை அமல்படுத்தவில்லை. அப்படி அமல்படுத்தினால் மாணவர்கள் இங்கேயே எளிதாக மருத்துவம் படிக்க முடியும்.

அதேசமயம், மத்திய அரசின் கட்டணத்தை அமல்படுத்தாமல் தி.மு.க. அண்கோ கம்பெனி, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளைக்கு துணை போகின்றன என்று தி.மு.க.வின் தில்லாலங்கடி தனத்தையும் வெளிச்சம்போட்டு காட்டி இருக்கிறார்கள். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் அதிகமாக இருப்பதால்தான் தன்னுடைய மகனே வெளிநாடு சென்று படித்ததாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தன்னையும் அறியாமல் ஒப்புக் கொண்டிருக்கிறார். மேற்கண்ட காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு மக்கள் மத்தியிலும் செம ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. ஆனாலும், இதையும் பொறுக்க முடியாத சில சமூக வலைத்தளப் போராளிகள், மத்திய பா.ஜ.க. அரசையும், பாரத பிரதமர் மோடியையும் தொடர்ந்து விமர்சித்தே வருகிறார்கள்.

உக்ரைனில் மருத்துவம் படிக்க நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரம்…

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் ஒப்புதல் வாக்குமூலம்…


Share it if you like it