பாதிரியார் மீது தி.மு.க. எம்.பி. தாக்குதல்… இந்த வீடியோதான் காரணமா?!

பாதிரியார் மீது தி.மு.க. எம்.பி. தாக்குதல்… இந்த வீடியோதான் காரணமா?!

Share it if you like it

10 வருடமா பஞ்சத்துல கிடந்தவங்க, இப்ப வெறிபிடித்து கோடி கோடியா சுருட்டுறாங்க. ஆகவே, 2024 தேர்தலில் தி.மு.க.வுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று பாதிரியார் காட்பிரே நோபுள் பேசியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. எனவே, பாதிரியார் மீது தி.மு.க. எம்.பி. தாக்குதல் நடத்த இதுதான் காரணமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் பேராயர் பர்னபாஸ் தரப்பினருக்கும், லே செயலாளர் ஜெயசிங் தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. லே செயலாளருக்கு ஆதரவாக தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் செயல்பட்டு வருகிறார். இந்த சூழலில், கல்விக் குழுச் செயலாளர் மற்றும் பள்ளியின் தாளாளர் பதவியிலிருந்து ஞானதிரவியத்தை நீக்கினார் பேராயர். இதனால், இரு தரப்பினரிடையான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. திருமண்டல அலுவலகத்தின் சில அறைகளுக்கு ஞானதிரவியம் தரப்பினர் பூட்டு போட்டுவிட்டனர்.

இந்த நிலையில், அறைகளை திறக்க வலியுறுத்தி சி.எஸ்.ஐ. திருமண்டல அலுவலகத்துக்கு வந்த இட்டேரியைச் சேர்ந்த பாதிரியார் காட்பிரே நோபுள் என்பவரை, தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் தரப்பினர் சரமாரியாகத் தாக்கினர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் பாதிரியார் கொடுத்த புகாரின் பேரில் ஞானதிரவியம் உட்பட 33 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக ஞானதிரவியத்திடம் விளக்கம் கேட்டு கட்சித் தலைமையும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பாக ஞானதிரவியத்துக்கு மட்டுமன்றி தி.மு.க.வுக்கு எதிராகவும் பாதிரியார் காட்பிரே நோபுள் வீடியோ வெளியிட்டிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அந்த வீடியோவில் பேசும் பாதிரியார் காட்பிரே நோபுள், “செந்தில்பாலாஜி கைது விவகாரம் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். இங்குதான் மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும். இதே ஸ்டாலின்தான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கவர்னரிடம் புகார் கொடுத்தார்.

செந்தில்பாலாஜி ஊழல்வாதி என்பது ஊரறிந்த உண்மை. இதனால்தான் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா. மேலும், தி.மு.க.வினர் 10 வருடம் பஞ்சத்துல கிடந்தவங்க. இன்னிக்கு வெறிபிடிச்சுப் போயி கோடி கோடியா சுருட்டுறாங்க. இன்னிக்கு எதிர்கட்சிகள் பலவீனமா இருக்கோ இல்லையோ. ஆனா, மக்கள் இதையெல்லாம் நினைவில் வைத்து வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

இதை வைத்துப் பார்க்கும்போது, இந்த வீடியோவுக்காகத்தான் பாதிரியார் காட்பிரே நோபுள் மீது தி.மு.க.வினர் தாக்குதல் இருக்க வேண்டும் என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது. அதோடு, பாதிரியார் மீது தி.மு.க.வினர் நடத்தியது திட்டமிட்ட தாக்குதல் என்பதும் புலனாகிறது. ஆகவே, திட்டமிட்ட தாக்குதல் நடத்திய தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் மீது போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.


Share it if you like it