திராவிட மாடல் கட்டுமானம்… அரை மணி நேர மழைக்கே விளையாட்டு மைதான கேலரி டமால்: ரூ.14 கோடி போச்சு!

திராவிட மாடல் கட்டுமானம்… அரை மணி நேர மழைக்கே விளையாட்டு மைதான கேலரி டமால்: ரூ.14 கோடி போச்சு!

Share it if you like it

பாளையங்கோட்டையில் 14 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட விளையாட்டு மைதான கேலரி, அரை மணி நேர மழைக்கே இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பேருந்து நிலையங்கள் சீரமைத்தல், வணிக வளாகங்கள், விளையாட்டு அரங்குகள் சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் 1,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டு, அரங்கத்தைச் சுற்றி இருபுறமும் இருக்கைகளுடன் கூடிய கேலரிகள், நவீன மேற்கூரைகள் அமைக்கப்பட்டு சமீபத்தில் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில், நெல்லை மாநகரில் நேற்று மாலை இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில், வ.உ.சி. மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த கேலரியின் மேற்கூரை காற்றில் பெயர்ந்து அடியோடு சரிந்து விழுந்தது. இங்கு வழக்கமாக காலை மற்றும் மாலை நேரத்தில் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதேபோல், இளைஞர்கள், பெண்கள் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். ஆனால், நேற்று மழை பெய்ததால் மைதானத்தில் ஆள் நடமாட்டம் இல்லை. இதனால், அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

மைதானம் சீரமைக்கப்பட்ட சில மாதங்களிலே கேலரி இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல, அரசின் அரசின் அலட்சியத்தால் 14 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்ட மைதானத்தின் மேற்கூரை சாதாரண மழைக்கே இடிந்து விழுந்த சம்பவம் விளையாட்டு வீரர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. திராவிட மாடல் கட்டுமானத்தில் பள்ளியின் காம்பவுண்டு சுவரே 3 நாட்கள்கூட தாக்குப்பிடிக்க மாட்டேங்குது. அப்படி இருக்கும்போது கேலரி என்ன லட்சணத்தில் இருக்கும் என்று பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர்.


Share it if you like it