நேபாள் விமான விபத்து: உயிரிழந்த இந்தியர்கள் யார்?!

நேபாள் விமான விபத்து: உயிரிழந்த இந்தியர்கள் யார்?!

Share it if you like it

நேபாள் நாட்டிலிருந்து 4 இந்தியர்கள் உட்பட 22 பேருடன் புறப்பட்டுச் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது தெரியவந்திருக்கிறது. இதில், பயணித்த அனைவரும் உயிரிழந்து விட்டனர். 14 உடல்கள் மீட்கப்பட்டிருக்கும் நிலையில், உயிரிழந்த 4 இந்தியர்கள் யார் என்பது அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

நேபாள் நாட்டி தலைநகர் காத்மாண்டுவில் இருந்து வடமேற்கே 200 கி.மீ. தொலைவிலுள்ள சுற்றுலா நகரான பொக்காராவிலிருந்து வடமேற்கில் 80 கி.மீ. தொலைவில் இருக்கும் ஜோம்சோம் நகருக்கு நேற்று காலை 9.55 மணியளவில் தாரா விமான நிறுவனத்தின் 9 NAET என்கிற சிறிய ரக விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில், 4 இந்தியர்கள், சில ஜப்பானியர்கள் உட்பட 19 பயணிகள் மற்றும் 3 ஊழியர்கள் என மொத்தம் 22 பேர் இருந்தனர். இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுபாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. தலகிரி என்கிற மலைப் பகுதிக்குச் சென்றபோது விமானம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் தொடர்பை இழந்ததாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இதையடுத்து, விமானத்தின் சிக்னல், விமானியின் செல்போன் சிக்னல் உள்ளிட்டவற்றை கொண்டு விமானத்தின் நிலை என்ன? என்பது குறித்து மலைப்பகுதியில் நேபாள ராணுவம் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தது. இதில்தான், மாயமான விமானம் விபத்துக்கு உள்ளானது தெரியவந்திருக்கிறது. முஸ்டங் மாகாணம் தசங்-2 என்ற பகுதியில் சனோஸ்வெர் என்ற இடத்தில் உள்ள மலைப்பகுதியில் விமானம் விபத்தில் சிக்கி இருக்கிறது. விமானத்தின் சிதைந்த பாகங்கள் மலைப்பகுதியில் கிடக்கின்றன. இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபட்டிருக்கிறது. இதுவரை 14 உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.

இதற்கிடையே, இந்த விமானத்தில் பயணம் செய்த இந்தியர்கள் யார் என்பது அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அசோக் குமார் திரிபாதி, அவரது முன்னாள் மனைவி வைபவி பண்டேகர் (திரிபாதி) மற்றும் அவர்களது குழந்தைகள் தனுஷ் மற்றும் ரித்திகா என்பது தெரியவந்திருக்கிறது. சில பயணிகளின் உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து கிடப்பதாக மோசமான வானிலை காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்கிறார்கள். விபத்து நடந்த இடம் சுமார் 14,500 அடி உயரத்தில் உள்ளது. ஆனால், 11,000 மீட்டர் உயரத்தில்தான் மீட்புக் குழு இறக்கி விடப்பட்டிருக்கிறது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it