New Dravida Model song: “பத்தல பத்தல வன்மமும் பத்தல!

New Dravida Model song: “பத்தல பத்தல வன்மமும் பத்தல!

Share it if you like it

இந்தா வாயின்கோ எனும் யூ டியூப் இணையதள ஊடகம் விக்ரம் பாடலை ரீமேக் செய்து தி.மு.க மற்றும் தி.க.வின் உண்மையான சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இக்காணொளி தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

திராவிடர் கழக தலைவராக இருப்பவர் வீரமணி. இவர், ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டுமுறைகளை தொடர்ந்து கீழ்த்தரமாக விமர்சனம் செய்ய கூடிய நபராக இருந்து வருகிறார். இவரின், வன்மம் நிறைந்த பேச்சுக்கு பின்னால் தி.மு.க தலைவர் ஸ்டாலின் இருப்பதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதற்கிடையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கும், கீ.வீரமணிக்கும் இடையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வார்த்தை போர் வெடித்தது. அப்பொழுது, காலம் காலமாக தி.மு.க.விலும் அ.தி.மு.க.விலும் ஓசி சோறு திண்ணும் ஐயா வீரமணி எங்களை விமர்சனம் செய்வதா? என்று மு.க அழகிரிக்குயின் மகன் தயா அழகிரி மிக கடுமையாக திராவிடர் கழக தலைவரை விமர்சனம் செய்து இருந்தார்.

இதையடுத்து, திராவிடர் கழக தலைவரை ஓசி சோறு என்று நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்தனர். அந்தவகையில், அறிவாலயம் ஓசி சாதம் எனும் பாடல் இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். அதன் லிங்க் இதோ.

இப்படிபட்ட சூழலில் தான், திராவிடர் கழக தலைவர் வீரமணியையும் விடியல் தருகிறேன் என தமிழக மக்களை ஏமாற்றி வரும் முதல்வர் ஸ்டாலினையும் இந்தா வாயின்கோ எனும் யூ டியூப் இணையதள ஊடகம் விக்ரம் பாடலை ரீமேக் செய்து வெளியிட்டு இருக்கும் காணொளி தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Share it if you like it