புதிய பார்லிமென்ட் கட்டடம்: பிரதமர் மோடி திடீர் விசிட்!

புதிய பார்லிமென்ட் கட்டடம்: பிரதமர் மோடி திடீர் விசிட்!

Share it if you like it

புதிதாக கட்டப்பட்டு வரும் பார்லிமென்ட் கட்டடத்தை பாரத பிரதமர் மோடி நேற்று திடீரென ஆய்வு செய்தார்.

டெல்லியில் தற்போது செயல்பட்டுவரும் பார்லிமென்ட் கட்டடம், 100 ஆண்டுகள் பழமையானது. எனவே, பழைய கட்டடத்திற்கு பதிலாக புதிய கட்டடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்து, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ராஜபாதை சீரமைப்பு, பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை ஜனாதிபதிக்கான புதிய மாளிகை ஆகியவற்றுடன் புதிய பார்லிமென்ட் கட்டப்படுகிறது. மேலும், பிரம்மாண்டமான அரசியல் சட்ட மண்டபம், எம்.பி.க்கள் ஓய்வு அறைகள், நூலகம், நிலைக்குழு அறைகள், உணவு அருந்தும் பகுதி, விசாலமான வாகன நிறுத்த பகுதி ஆகிய வசதிகளும் இடம்பெறுகின்றன.

இந்த புதிய பார்லிமென்ட் கட்டடத்தை டாடா புராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் கட்டி வருகிறது. இக்கட்டுமான பணி இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை திடீரென புதிய பார்லிமென்ட் கட்டடத்திற்கு விசிட் அடித்து, பணிகளை பார்வையிட்டார். மேலும், நடைபெற்றும் பணிகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார். அங்கு சுமார் 1 மணி நேரம் செலவழித்த பிரதமர் மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வசதிகளையும் பார்வையிட்டனர்.


Share it if you like it