சமீபத்தில் பெங்களூருவில் உணவகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சிசிடிவி மூலம் குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த சந்தேகத்தின் பேரில், ராமநாதபுரத்தில் உள்ள தேவிப்பட்டினத்தை சேர்ந்த ஷேக் தாவூத் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மண்ணடி உள்ளிட்ட 5 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் தேவிபட்டினம் பழங்கோட்டை தெருவில் உள்ள ஷேக் தாவூத் மற்றும் அவரது தந்தை வீடுகளில் இன்று(மார்ச் 27) என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூர் ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக எழுந்த சந்தேகத்தின் பெயரில் ஷேக் தாவூத் வீட்டில் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேக் தாவூத் வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறைக்கு மேல் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.