உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் சூழலில், இந்திய மாணவர்களை அழைத்து வருவது பற்றி மத்திய அமைச்சர் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காத நிலையில், அவர் குறித்த செய்தி வெளியாகி இருப்பதற்கு பிரபல ஊடகத்தின் பெயரில் புகார் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையே கடுமையான போர் மேகம் சூழ்ந்துள்ளது. அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் வண்ணம், பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ருமேனியாவின் வழியாக நேற்று 219 இந்தியர்கள் மும்பை விமான நிலையம் வந்து இறங்கினர். இக்கட்டான இந்த சூழலில் மத்திய அரசிற்கு உதவியாக இருக்க, வேண்டிய தமிழக அரசு வழக்கம் போல ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது. இந்தியர்களை மீட்பதில் மோடி தலைமையிலான அரசுக்கு, வெற்றி கிடைப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல். சில விஷமிகள் தொடர்ந்து தவறான பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் பற்றி எதுவும் கூறாத நிலையில், அவர் குறித்த பொய் செய்தி ஒன்று புதிய தலைமுறை ஊடகத்தின் பெயரில் வந்துள்ளது. இது குறித்து அவர் அந்நிறுவனத்திடம் புகார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தலைமுறையை சேர்ந்த கார்த்திகை செல்வன், கார்த்திகேயன், மற்றும் பிற ஊடக நெறியாளர்கள். மத்திய அரசு கொண்டு வரும் திட்டத்திற்கு எதிராகவும். தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசிற்கு, ஆதரவான நிலைப்பாட்டையும் தமிழக ஊடகங்கள் இன்று வரை எடுத்து வருவதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் தான், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த புகாரினை தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.