நீட் தேர்வை ரத்து செய்ய இனி வாய்ப்பில்லை – பாலகுருசாமி

நீட் தேர்வை ரத்து செய்ய இனி வாய்ப்பில்லை – பாலகுருசாமி

Share it if you like it

நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுகவால் இது நாள்வரை அதை செயல்படுத்த இயலவில்லை. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக வரும் 20-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளது. இதனிடையே நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, நீட் தேர்வை ஏற்றுக் கொண்டு தமிழக மாணவர்கள் முன்னிலை பெற்று வரும் நிலையில் போலியான பரப்புரைகளையும் வாக்குறுதிகளையும் மாணவர்களும் பெற்றோர்களும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். நுழைவுத் தேர்வு அவசியமென உச்ச நீதிமன்றமும் தேசிய மருத்துவ ஆணையமும் அறிவித்து விட்ட நிலையில், நீட் தேர்வை நிறுத்த இனி வாய்ப்பில்லை என்றும் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் தேர்வுக்கு தொடர்ந்து தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பால குருசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.


Share it if you like it